Sikkim-ன் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 

Last Updated : Sep 24, 2018, 12:34 PM IST
Sikkim-ன் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்! title=

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 

 

 

 

 

சிக்கிம் மாநிலத்தில் விமான போக்குவரத்து இல்லாத நிலையில் தற்போது அங்கு புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையமானது காங்டாங் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. 

sikkim pakyong airport

இந்த பசுமை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை முயற்சியாக விமானங்கள் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. மொத்தம் 201 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 5 லட்சம் பயணிகளைக் கையாளும் வசதிகொண்ட விமான நிலையத்தை அமைப்பதற்காக 553 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

sikkim pakyong airport

sikkim pakyong airport

இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். முதலில் அக்டோபர் 4 முதல் பயணிகள் விமானம் இயக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், தற்போது இது அக்டோபர் 8 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Trending News