Post Office Scheme: மக்களின் நலனுக்கென அஞ்சல் அலுவலகத்தின் மூலம் பல சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது, அதில் மாதந்தோறும் வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் சில திட்டங்களும் கிடைக்கின்றன. மாதாந்திர மாதாந்திர வருமானத் திட்டத்தின் மூலம் நமது வருமானத்தை அதிகரிக்க முடியும். பிஓஎம்ஐஎஸ் எனப்படும் தபால் அலுவலகத்தின் மாத வருமான திட்டமானது 5 ஆண்டு முதிர்வு காலத்தை கொண்டுள்ளது இதில் 7.8% வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகள் பங்களித்த பிறகு திட்டத்தின் முடிவில் முதலீடு செய்யப்பட்ட பணம் முதலீட்டாளருக்கு கிடைக்கப்பெறும்.
முதலீட்டாளர் நாமினியை நியமித்துக்கொள்ளும் விருப்பம் பிஓஎம்ஐஎஸ் திட்டத்தில் வழங்கப்படுகிறது, பணத்தை தொடர்ச்சியான வைப்புத்தொகையாக மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. உங்கள் கணக்கை நீங்கள் ஒரு தபால் அலுவலகத்திலிருந்து மற்றொரு தபால் அலுவலகத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் மற்றும் இந்த திட்டத்தில் சிறுவர்களும் பங்களிக்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் முதலீட்டாளர் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் வெவ்வேறு கணக்கு உருவாக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் கணக்கைத் திறக்க விரும்புபவர்கள் காசோலைகள் அல்லது பணத்தைப் பயன்படுத்தி திறக்கலாம், மேலும் இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்துகூட கூட்டுக் கணக்காக திறந்து பங்களிக்க முடியும்.
மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசியதால் ரூ.1.57 லட்சத்தை இழந்த நபர்!
பிஓஎம்சிஎஸ் திட்டத்தில் இணைய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள் அல்லது வயதான நபர்கள் தான் அதிகளவில் பங்களிக்கின்றனர், பத்து வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகனுக்கு அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரு மைனர் ரூ.3,000,000 வரை மட்டுமே முதலீடு சியா முடியும். இந்த திட்டத்தில் முதலீட்டாளருக்கு மாதாந்திர வட்டி செலுத்தப்படுகிறது, வட்டியிலிருந்து டிடிஎஸ் எடுக்கப்படுவதில்லை. இருப்பினும், முதலீட்டாளர் பெறப்பட்ட வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ