விரைவில் அறிவிப்பு...!! ரயில்வேயில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வர உள்ளது

இன்னும் ஒரு மாதத்தில் ஒரு லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை அறிவிக்க உள்ளது இந்தியன் இரயில்வே நிர்வாகம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 12, 2019, 03:00 PM IST
விரைவில் அறிவிப்பு...!! ரயில்வேயில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வர உள்ளது title=

ரயில்வே வேலைகள் 2019, நீங்கள் இந்திய ரயில்வேயில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பினால், உங்களுக்காக இன்னொரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து விரைவில், பல்வேறு பணிக்கான நேரடி ஆட்சேர்ப்பு நியமன அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். இந்த நியமனங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிரப்பப்படும். இதற்காக ரயில்வே வாரியத்தின் சார்பில், சம்பந்தப்பட்ட அனைத்து மண்டலங்களும் ஏற்கனவே ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. அதில் காலியாக உள்ள பதவிகளை பற்றிய தகவல்களை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. 

கிழக்கு மத்திய ரயில்வே 3000 காலியிடங்களை அறிவித்துள்ளது. இது தவிர, 6 ஆயிரம் நியமனங்கள் நடைபெறுகின்றன.

இரயில்வேயில் இரண்டு கட்டங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. முதல் கட்டமாக, 2019 ஜனவரி 1 வரை வெவ்வேறு ரயில்வே துறைகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுக்குறித்து தகவல்களை அறிய தான் ரயில்வே வாரியத்தின் கடிதம் எழுதியுள்ளது. 

இரண்டாவது கட்டமாக வரும் மார்ச் 31, 2021 ஆம் ஆண்டு ஏரளாமான ரயில்வே பணியிடங்கள் காலியாகும். மொத்த காலியிடங்களின் எண்ணிக்கையை குறித்து தகவல்களை அனுப்பமாறு ரயில்வே வாரியம் கேட்டுள்ளது. ரயில்வேயின் அனைத்து மண்டலங்களையும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் காலியாக உள்ள பணியிடங்களை பற்றி விவரங்களை அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த விவரங்கள் கிடைத்தவுடன் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கப்படும். கல்வி தகுதிக்கு ஏற்ப பணியிடங்கள் வகைபடுத்தப்பட்டு நிரப்பப்படும். இந்த பணியிடங்களை குறித்து இந்த மாதம்(பிப்ரவரி) அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வேயின் தகவலின் படி, நாடு முழுவதும் மொத்தம் 16 மண்டலங்கள் உள்ளன, இதில் 73 பிரிவுகளும் உள்ளன. அனைத்து இரயில் மண்டலங்களிலும் அனைத்து காலியிடங்களும் அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்பட்டால், அனைத்து மண்டலங்களையும் சேர்த்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News