முதல் சந்திப்பிலேயே முத்திரை பதிக்கும் ராசிகள் இவைதான்: உங்களுக்கும் இந்த ராசியா?

வித்தியாசமான ஈர்ப்பு சக்தி கொண்ட 3 ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவர்கள் முதல் சந்திப்புலேயே தங்கள் முத்திரையை பதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 10:51 AM IST
  • ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமை உடையவர்கள்.
  • மகர ராசிக்காரர்கள் தங்கள் வேலையை பொறுப்புடன் செய்வார்கள்.
  • சிம்ம ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் தங்கள் அபிப்ராயங்களை உறுதியாக தெரியப்படுத்துகிறார்கள்.
முதல் சந்திப்பிலேயே முத்திரை பதிக்கும் ராசிகள் இவைதான்: உங்களுக்கும் இந்த ராசியா? title=

ஜோதிட சாஸ்திரப்படி, 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகளின் அடிப்படையில், ஒவ்வொரு நபரின் தன்மை மற்றும் ஆளுமை ஆகியவற்றை அறிய முடியும். இந்த 12 ராசிக்காரர்களின் இயல்புகளும் விருப்பு வெறுப்புகளும் வேறுபட்டிருக்கும்.

12 ராசிகளும் (Zodiac Signs) 9 கிரகங்களால் ஆளப்படுகின்றன. இந்த கிரகங்களின் தாக்கம் ராசிகளில் இருக்கின்றன. இது தவிர, மனிதர்களுக்கே உரிய தனிப்பட்ட இயல்புகளின் தாக்கமும் இருக்கும். சிலரை பார்த்தால், பார்த்த நொடியிலேயே நமக்கு பிடித்துவிடும். இப்படிப்பட்டவர்கள் அனைவரையும் தங்கள் வசம் எளிதில் ஈர்த்து விடுவார்கள். அனைவரும் இவர்களுடன் பேச, பழக விரும்புவார்கள். 

வித்தியாசமான ஈர்ப்பு சக்தி கொண்ட அத்தகைய 3 ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவர்கள் முதல் சந்திப்புலேயே தங்கள் முத்திரையை பதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். 

ரிஷபம் (Taurus): ஜோதிடத்தின் படி, ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமை உடையவர்கள். வசியம், ஈர்ப்பு ஆகிய விஷயங்களில் இவர்கள் மேலோங்கி இருப்பார்கள். இவர்கள், தங்கள் எதிரில் இருப்பவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள். 

ரிஷப (Taurus) ராசியின் அதிபதி சுக்கிரன், இந்த குணங்களை இவர்களுக்கு அளிக்கிறார். இருப்பினும், இந்த ராசிக்காரர்களின் நடத்தை மிகவும் சீரானதாக இருக்கும். இவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களின் இயல்பு மற்றவர்களை ஊக்குவிக்கும். இந்த காரணத்தால், மக்கள் உடனடியாக அவர்களால் ஈர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் அதிக மரியாதையும் கௌரவமும் கிடைக்கும்.

ALSO READ | செவ்வாய் தோஷத்தினால் திருமண தடையா; சில எளிய பரிகாரங்கள்..!!!

மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்கள் ஆளுமையின் அடிப்படையில் மிகவும் வேறுபட்டவர்கள். இவர்கள் எங்கு சென்றாலும் நிமிடங்களிலேயே மக்களை தங்களின் ரசிகர்களாக்கி விடுகிறார்கள். மக்கள் இவர்களது கொள்கைகளைப் பின்பற்ற விரும்புவார்கள். மகர ராசிக்காரர்கள் தங்கள் வேலையை பொறுப்புடன் செய்வார்கள். மகர ராசியின் அதிபதி சனிபகவான், இவர்களை கடின உழைப்பாளிகளாக ஆக்குகிறார். இந்த குணங்களால்தான் பணியிடத்தில் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. அதே சமயம், இவர்களும் மற்றவர்களால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். 

சிம்மம் (Leo): ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களின் தலை நேர்த்தியாகவும், நெற்றி பெரிதாகவும் இருக்கும். இவர்களின் நகங்களும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும், கண்களில் வித்தியாசமான பிரகாசம் இருக்கும். சிம்ம (Leo) ராசியின் அதிபதி சூரிய பகவான், இவர்களுக்கு இந்த குணங்களை வழங்குகிறார். இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிக அன்பு செலுத்துவார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழ்பவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் தங்கள் அபிப்ராயங்களை உறுதியாக தெரியப்படுத்துகிறார்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்க விரும்பம் கொண்டவர்கள் இவர்கள். 

ALSO READ | குருவின் இந்த சஞ்சாரத்தால் 3 ராசிகளுக்கு இக்கட்டான நேரம்: நீங்களும் இந்த ராசியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News