சனியின் தாக்கத்தால் இந்த ராசிக்கு நெருக்கடியான நேரம்: ஏப்ரல் வரை எச்சரிக்கை நல்லது

ஏழரை நாட்டு சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு நபரின் வாழ்க்கையில் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 02:43 PM IST
  • ஏழரை நாட்டு சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன.
  • இரண்டாம் கட்டமான ஜென்ம சனி மிகவும் இக்கட்டான கட்டமாக பார்க்கப்படுகின்றது.
  • இதை ஒருவர் அனுபவிக்கும் போது பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்.
சனியின் தாக்கத்தால் இந்த ராசிக்கு நெருக்கடியான நேரம்: ஏப்ரல் வரை எச்சரிக்கை நல்லது title=

மகர ராசியில் ஏழரை நாட்டு சனி: பொதுவாக ஏழரை நாட்டு சனி என்றாலே நாம் அச்சம் கொள்கிறோம். ஒருவரது ஜாதகத்தில் ஏழரை நாட்டு சனி இருக்கும் காலகட்டத்தில் அவர் பல வித பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 

ஏழரை நாட்டு சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு நபரின் வாழ்க்கையில் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதன் முதல் கட்டம் விரைய சனி என்றும், இரண்டாம் கட்டம்  ஜென்ம சனி என்றும், மூன்றாம் கட்டம் பாத சனி என்றும் அழைக்கப்படுகின்றன. 

ஜோதிடத்தின் (Astrology) படி, அதன் இரண்டாம் கட்டமான ஜென்ம சனி மிகவும் இக்கட்டான கட்டமாக பார்க்கப்படுகின்றது. இதை ஒருவர் அனுபவிக்கும் போது பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார். தற்போது மகர ராசிக்காரர்கள் இதை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகையல் தற்போது இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

மகர ராசிக்காரர்கள் 29 ஏப்ரல் 2022 அன்று ஏழரை நாட்டு சனியின் இந்த மிக வேதனையான கட்டத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள். இதற்குப் பிறகு, இவர்களுக்கு கடைசி கட்டமான பாத சனி தொடங்கும். இந்த கட்டம் ஜென்ம சனி காலத்தை ஒப்பிடும்போது, குறைவான துர் விளைவுகளையே அளிக்கும். 

ALSO READ | Luky Zodiacs: அடுத்த 30 நாட்களுக்கு பொன்னான வாய்ப்பு பெறும் 5 ராசிக்காரர்கள்!

சனிப்பெயர்ச்சியின் கடைசி இரண்டரை ஆண்டுகளில், ஒருவர் அனுபவிக்கும் பிரச்சனைகள் பொதுவாக குறையத் தொடங்குகின்றன. அது மட்டுமல்லாமல் மேலும் சில நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இந்த நேரத்தில் அதிகரிக்கின்றன. 

ஆனால் ஜூலை 12 முதல், மகர ராசி மீண்டும் ஏழரை நாட்டு சனியின் இரண்டாவது கட்டத்தின் பிடியில் வரும். ஏனெனில், இந்த நேரத்தில் மீண்டும் சனி பகவான் (Lord Shani) மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவார். சனி பகவானின் தலைகீழ் சஞ்சாரத்தால், அதாவது வக்ரி சஞ்சாரத்தால் இப்படி நடக்கும். 

ஜூன் 5 ஆம் தேதி சனி பகவான் தனது தலைகீழ் சஞ்சாரத்தைத் தொடங்கி, மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி முதல் கும்ப ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிக்கிறார். அங்கு அவர் 17 ஜனவரி 2023 வரை இருப்பார். இதற்குப் பிறகு, மீண்டும் கும்ப ராசிக்கு திரும்புவார். 

சனியின் இந்த சஞ்சாரத்தால், மகர (Capricorn) ராசிக்காரர்கள் 2023 ஜனவரி 17-ம் தேதியன்றுதான் ஏழரை நாட்டு சனியின் மிகவும் கடினமான கட்டத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவரை இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். 

மேலும், மகர ராசிக்காரர்கள் இந்த கால கட்டத்தில் அனைத்து பணிகளையும் சிறப்பு கவனம் செலுத்தி செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் அனைத்து பக்கங்ளிலிருந்தும் பிரச்சனைகள் தலை தூக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 

ALSO READ | சுக்ரனின் இடமாற்றத்தால், சில ராசிகளுக்கு கொண்டாட்டம், சிலருக்கு திண்டாட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News