ரேஷன் கார்டுக்கான தரநிலைகள்: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ரேஷன் கார்டு விதிகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறை மாற்றி வருகிறது. அரசு ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் எடுக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளில் துறை மாற்றங்களைச் செய்து வருகிறது.
புதிய தரநிலையின் வரைவு இப்போது கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பல சுற்றுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. புதிய விதியின் அடிப்படையில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
பணக்காரர்களும் பலன்களைப் பெறுகிறார்கள்
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கூற்றுப்படி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும் பலர் உள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டு பொது விநியோக அமைச்சகம் தரநிலைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளது. இப்போது புதிய தரநிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றப்படும். இதனால் எந்த வித குழப்பமும் மோசடியும் இல்லாமல் செயல்முறை வெளிப்படையாக இருக்கும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி! அரசு எடுத்த பெரிய முடிவு
இந்த மாற்றங்கள் எதற்காக செய்யப்படுகின்றன
இதுகுறித்து, உணவு மற்றும் பொது வினியோகத் துறையினர் கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக, தரநிலை மாற்றம் தொடர்பாக, மாநிலங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளை இணைத்து, புதிய தரநிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தரநிலைகள் விரைவில் இறுதி செய்யப்படும்.
புதிய தரநிலை அமலுக்கு வந்த பிறகு மலிவு விலையில் கிடைக்கும் ரேஷன் பொருட்களைப் பெற தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள், தகுதியில்லாதவர்கள் பயன்பெற முடியாது. தேவைப்படுபவர்களை மனதில் வைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கூற்றுப்படி, டிசம்பர் 2020 வரை 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம்' 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 69 கோடி பயனாளிகள் அதாவது NFSA இன் கீழ் வரும் 86 சதவீத மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி பேர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று பலன்களைப் பெறுகின்றனர்.
மேலும் படிக்க | குறைந்த ரேஷன் கிடைக்கிறதா, இதைச் செய்யுங்க முதல்ல
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR