புதுடெல்லி: Standards for Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. ரேஷன் கார்டு விதிகளை Department of Food & Public Distribution மாற்றி வருகிறது. இந்த Department of Food & Public Distribution நிறுவனமானது உண்மையில், அரசு ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் (Ration Card) எடுக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளில் மாற்றங்களைச் செய்து வருகிறது. புதிய தரநிலையின் வரைவு கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பல சுற்றுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. புதிய விதியில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் அறிக்கையின்படி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (National Food Security Act-NFSA) பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பொருளாதார ரீதியாக வளமான பலர் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு பொது விநியோக அமைச்சகம் தரநிலைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளது. உண்மையில், தற்போது புதிய தரநிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றப்படும், இதனால் எந்த குழப்பமும் ஏற்படாது.
ALSO READ | No more Farm Laws: நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தயார்
ஏன் மாற்றங்கள் நிகழ்கின்றன
இதுகுறித்து, உணவு மற்றும் பொது வினியோகத் துறையினர் கூறியதாவது., கடந்த ஆறு மாதங்களாக, தரநிலை மாற்றம் குறித்து, மாநிலங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளை இணைத்து புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தரநிலைகள் விரைவில் இறுதி செய்யப்படும். புதிய தரநிலை அமலுக்கு வந்த பிறகு, தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள், தகுதியில்லாதவர்கள் பயன்பெற முடியாது. தேவைப்படுபவர்களை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கூற்றுப்படி, இதுவரை 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம்' 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டிசம்பர் 2020 வரை செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 69 கோடி பயனாளிகள் அதாவது NFSA இன் கீழ் வரும் மக்கள் தொகையில் 86 சதவீதம் பேர் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி பேர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதன் மூலம் பலன்களைப் பெறுகின்றனர்.
ALSO READ | இலவச அரிசி, கோதுமை நவம்பர் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது: மத்திய அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR