PAN-Aadhaar Link: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மார்ச் 31, 2022-க்கு முன் பான்-ஆதார் கார்டை இணைக்குமாறு வங்கி தனது கணக்குதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால் அவர்களின் வங்கிச் சேவை பாதிக்கப்படும் என்றும் வங்கி கூறியுள்ளது. இதை விளக்கும் வகையில் எஸ்பிஐ (SBI) ட்வீட் செய்துள்ளது.
மார்ச் 31 வரை வாய்ப்பு
எஸ்.பி.ஐ, 'வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்படி செய்தால் எந்த சிரமமும் இல்லாமல், தடையற்ற வங்கி சேவையை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அனுபவிக்க முடியும். பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம். பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், பான் (PAN) செயலிழந்துவிடும். மேலும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் எண்ணைப் பயன்படுத்த முடியாது.' என்று கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2021-லிருந்து மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! வங்கியின் இந்த புதிய சேவை சூப்பர்!
பான்-ஆதார் கார்டை இணைப்பது எப்படி
முதல் வழி
1- முதலில் நீங்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in/home-க்குச் செல்லவும்
2- இங்கே இடது பக்கத்தில் Link Aadhaar என்ற அப்ஷனைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்
3- ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கு நீங்கள் பான், ஆதார் மற்றும் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பெயரை நிரப்ப வேண்டும்.
4- உங்கள் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், 'I have only year of birth in aadhaar card' என்ற பெட்டியை டிக் செய்யவும்.
5- கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும் அல்லது OTP-க்கு டிக் செய்யவும்
6- லிங் ஆதார் (Aadhaar Card) பொத்தானைக் கிளிக் செய்யவும். இந்த வகையில் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு விடும்.
இரண்டாவது வழி
- எஸ்எம்எஸ் மூலமாகவும் பான் மற்றும் ஆதாரை இணைக்கலாம்
- மொபைலின் மெசேஜ் பாக்சில், - UIDPAN<12 இலக்க ஆதார்> <10 இலக்க PAN> என டைப் செய்யவும்.
- இந்த செய்தியை 567678 அல்லது 56161 க்கு அனுப்பவும். இதனுடன் இந்த செயல்முறை நிறைவுபெறும்.
ALSO READ | வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த வங்கியும் FD வட்டி விகிதத்தை அதிகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR