பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தியை அனுப்பியுள்ளது எஸ்பிஐ வங்கி. அது தொடர்பான மேலதிக விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆதார்-பான் இணைப்புக்கான கடைசி தேதி 2021 ஜூன் மாதம் 30ஆம் தேதியாகும். அதற்கு முன்னதாக, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் அட்டையுடன், பான் கார்டை இணைக்குமாறு வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
We advise our customers to link their PAN with Aadhaar to avoid any inconvenience and continue enjoying a seamless banking service.#ImportantNotice #AadhaarLinking #Pancard #AadhaarCard pic.twitter.com/LKIBNEz7PO
— State Bank of India (@TheOfficialSBI) May 31, 2021
எந்தவித அசெளகரியமும் ஏற்படாமல் இருக்க விரைவில் ஆதார் மற்றும் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்கள், தங்களது 12 இலக்க ஆதார் (Aadhaar) எண்ணை, நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஜூன் 30, 2021 க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்குமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Also Read | Aadhaar-PF இணைப்பு கட்டாயம்; இணைக்கவில்லை என்றால் பெரும் நிதி இழப்பு ஏற்படலாம்
"வாடிக்கையாளர்கள் எந்தவொரு அசெளகரியத்தையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் தங்கள் பான் உடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்துகிறோம்" என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏன் ஆதார் உடன் பான் உடன் இணைக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேற்கோளிட்டுள்ளது. பான் உடன் ஆதார் இணைப்பது கட்டாயமாகும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஆதார் பான் உடன் இணைக்கப்படாவிட்டால், பான் செயல்படாத அல்லது செயலற்றதாக இருக்கும் என்று கருதப்படும். இதன் பொருள், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்தவொரு குறிப்பிட்ட பரிவர்த்தனைகளையும் செய்ய பான் விவரங்களை மேற்கோள் காட்ட முடியாது. எனவே தேவையான நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் உடனே எடுக்க வேண்டும் என்று வங்கி தனது வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Also Read | Corona சிகிச்சைக்காக Rs 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் கொடுக்கும் வங்கி எது?
பான் உடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
பான் உடன் ஆதார் எவ்வாறு இணைப்பது என்பது குறித்த படிப்படியான விவரங்களை எஸ்பிஐ வழங்கியுள்ளது.
உங்கள் பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வருமான வரி இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் “Link Aadhaar” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
வருமான வரித் துறை தனது புதிய இ-ஃபைலிங் போர்ட்டலான www.incometax.gov.in ஐ ஜூன் 7, 2021 அன்று தொடங்கப் போகிறது தற்போதைய போர்ட்டலான, Www.incometaxindiaefiling.gov.in ஜூன் 6, 2021 வரை செயல்படாது என்பதையும் எஸ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது.
Also Read | History June 02: இரண்டாம் எலிசபெத்துக்கு முடிசூட்டப்பட்டது மற்றும் பல…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR