Corona சிகிச்சைக்காக Rs 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் கொடுக்கும் வங்கி எது?

கொரோனா தொற்றுநோய் பரவி மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் பலர் தவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகள் கொரோனா சிகிச்சைக்காக தனிநபர் கடன்களை வழங்குகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 31, 2021, 11:51 PM IST
  • Corona சிகிச்சைக்காக Rs 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் கொடுக்கும் வங்கி
  • 5 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடன் (personal loan) வாங்கலாம்
  • 8.5 சதவீத வட்டியில் தனிநபர் கடன்
Corona சிகிச்சைக்காக Rs 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் கொடுக்கும் வங்கி எது?  title=

Corona treatment personal loan: கொரோனா தொற்றுநோய் பரவி மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் பலர் தவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகள் கொரோனா சிகிச்சைக்காக தனிநபர் கடன்களை வழங்குகின்றன. 

கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க, பொதுத்துறை நிறுவன வங்கிகள் எடுத்துள்ள சிறந்த முயற்சி இது. கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் தனிநபர் கடனுக்கு யாரும் உத்தரவாதம் கொடுக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இதன் கீழ், கொரோனா சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடன் (personal loan) வாங்கலாம். இந்த கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக, உத்தரவாதம் இல்லாத தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்கள் 10 முதல் 16 சதவீதம் வரை இருக்கும், இருப்பினும், கொரோனா சிகிச்சைக்கான கடன் மலிவாக இருக்கும். 

Also Read | lifespan: நீங்க 150 வயசு வாழலாம், இது அறிவியல் சொல்லும் உண்மை 

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ கொரோனா இந்த தனிநபர் கடனை சிகிச்சைக்காக 8.5 சதவீதத்திற்கு வழங்கி வருகிறது. வெவ்வேறு பொதுத்துறை வங்கிகள்   கொரோனா சிகிச்சைக்கான கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளன.

கொரோனா சிகிச்சை தனிநபர் கடனின் கீழ், எந்தவொரு நபரும் தனது குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் சிகிச்சையளிப்பதற்காக வங்கியில் இருந்து இந்த கடனை வாங்கலாம். இந்த கடனை ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 

கொரோனாவின் இரண்டாவது அலை பலரை பாதிக்க, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக, உத்தரவாதமற்ற தனிநபர் கடன் பெறும் போக்கு அதிகரித்தது. இதில் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக இருந்தன. இதை கருத்தில் கொண்டு அரசாங்க வங்கிகள் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு கடன் திட்டத்தை உருவாக்கியுள்ளன. இது, ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கிறது.

Also Read | தனுஷின் ‘ஜகமே தந்திரம்’; நாளை வெளியாகிறது ட்ரைலர்..!!

கொரோனா சிகிச்சைக்கு உங்களுக்கு கடன் தேவைப்பட்டால், நீங்கள் ஒரு அரசாங்க வங்கியின் கிளைக்குச் சென்று அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, கொரோனா சிகிச்சைக்காக ஆன்லைனில் கடன் விண்ணப்பிக்க இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.  

ஒருவர் இந்த கடனுக்கு இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம் என்று வங்கிகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில், உத்தேச செலவு கட்டண ரசீதை வாங்கிக் கொண்டு வங்கி கிளையை அணுகலாம். கடன் திருப்பிச் செலுத்தும் திறனைக் கருத்தில் கொண்டு கடன் தொகையை வங்கி தீர்மானிக்கும். 

இரண்டாவது வகையில், கொரோனா நோயாளிக்கான சிகிச்சை செலவுகளுக்காக மருத்துவமனை நிர்ணயித்திருக்கும் தொகை கடனாக வழங்கப்படும். வங்கிக்கு நேரடியாக சென்று மருத்துவமனையின் ரசீதைக் கொடுத்து தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். சிகிச்சைக்காக, பொதுத்துறை வங்கிகள் 25 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன்களை வழங்குகின்றன.  

Also Read | சகுனி கதாநாயகின் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News