SBI Home Loan: சுதந்திர தினத்தில் வங்கி அளித்த சூப்பர் சலுகை, விவரம் இதோ

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு மிகவும் கவர்ச்சிகரமான தள்ளுபடி வசதியை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2021, 12:04 PM IST
  • SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.
  • 30 லட்சம் முதல் 75 லட்சம் வரை வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.95 சதவீதமாக இருக்கும்.
  • பல காரணிகளைப் பொறுத்து கடன் கிடைக்கும்.
SBI Home Loan: சுதந்திர தினத்தில் வங்கி அளித்த சூப்பர் சலுகை, விவரம் இதோ title=

புதுடெல்லி: இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. சுதந்திர தினத்தன்று ஒரு சிறப்பம்சமாக, SBI வீட்டுக் கடனில் பூஜ்ஜிய செயலாக்கக் கட்டணத்தை வழங்குகிறது. இந்த தகவலை SBI அளித்துள்ளது.

வங்கி சார்பில் கவர்ச்சிகரமான சலுகை

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு மிகவும் கவர்ச்சிகரமான தள்ளுபடி வசதியை வழங்குகிறது. வீட்டுக் கடன் வசதியின் கீழ், பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளுக்கான தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

வாடிக்கையளர்கள் எஸ்பிஐ-யின் யோனோ சேவையின் (SBI’s YONO service) கீழ் வீட்டுக் கடன் வாங்க விரும்பினாலும், 5 பிபிஎஸ் வட்டி சலுகையின் பலனைப் பெறலாம். எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.70 சதவீதம் ஆகும். எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு 6.70 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .30 லட்சம் வரை வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

30 லட்சம் முதல் 75 லட்சம் வரை வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.95 சதவீதமாக இருக்கும். 75 லட்சத்துக்கு மேல் உள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் வெறும் 7.05 சதவீதமாக இருக்கும்.

ALSO READ: Senior Citizens: இந்த சிறப்பு திட்டங்களால் மூத்த குடிமக்களுக்கு பம்பர் வரவு, விவரம் இதோ

இந்த வகையில் விண்ணப்பிக்கவும்

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் (Independence Day) கீழ், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, அதாவது இன்று, எஸ்பிஐ-யின் இந்த கவர்ச்சிகரமான வீட்டுக் கடன் வசதியைப் பெற முடியும். எஸ்பிஐயின் டிஜிட்டல் சேவையான யோனோ எஸ்பிஐ மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது தவிர, எஸ்பிஐ (SBI) 7208933140 என்ற எண்ணையும் வெளியிட்டுள்ளது. தனிநபர்கள் வீட்டுக் கடனுக்காக இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கலாம்.

எந்த அடிப்படையில் கடன் கிடைக்கும்?

கடனுக்கு விண்ணப்பிப்பவரின் வருமானம், அடகுவைக்கும் திறன், நடப்பு கடன், கடன் வரலாறு, கடனை திருப்பிச் செலுத்தும் தன்மை போன்ற பல காரணிகளைப் பொறுத்து கடன் கிடைக்கும் என்று எஸ்.பி.ஐ ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளது.

ALSO READ: SBI Alert: இனி ஹோம் லோன் வாங்குவது ரொம்ப ஈஸி; முழு விவரம் இங்கே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News