Yes Bank vs SBI: மிகச்சிறந்த வட்டியை அளிக்கும் வங்கி எது?

ஆகஸ்ட் 5 ஆம் தேதி YES வங்கி தனது FD விகிதங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவிகிதம் வரை ஆண்டு வட்டி அளிக்கின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 05:17 PM IST
Yes Bank vs SBI: மிகச்சிறந்த வட்டியை அளிக்கும் வங்கி எது? title=

YES bank FD rates: சந்தையின் ஏற்ற இறக்கங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழியை நீங்கள்  தேடுகிறீர்கள் என்றால், வங்கிகளின் நிலையான வைப்பு (Fixed Deposit) உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கலாம்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி YES வங்கி தனது FD விகிதங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவிகிதம் வரை ஆண்டு வட்டி அளிக்கின்றது. SBI உடன் ஒப்பிடும்போது, ​​மூத்த குடிமக்களுக்கு YES வங்கி 1 சதவீதம் அதிக வட்டியை வழங்குகிறது.

YES Bank: FD-யில் எவ்வளவு வட்டி

2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகையில் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு YES வங்கி ஆண்டுக்கு 3.25 % முதல் 6.50 % வரையிலான வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வெவ்வேறு கால திட்டங்களுக்கு வழங்கப்படுகின்றது.

5-10 ஆண்டு கால அளவிற்கான FD-யில் வழக்கமான வாடிக்கையாளக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 6.50 சதவீதம் வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு ள் 5-10 ஆண்டு கால அளவிற்கான FD-யில் 7.25 சதவிகித வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதங்கள் 5 ஆகஸ்ட் 2021 முதல் பொருந்தும்.

SBI: FD-யில் எவ்வளவு வட்டி

அரசு வங்கியான எஸ்பிஐ (SBI) வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ரூ .2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு 2.90 சதவீதம் முதல் 5.40 சதவீதம் வரை ஆண்டு வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வெவ்வேறு காலங்களுக்கானதாக இருக்கும்.

வழக்கமான வாடிக்கையாளர் 5-10 வருட FD-யில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 5.40 சதவிகிதம் வட்டியை பெறுவார்கள். மூத்த குடிமக்களுக்கான 5-10 வருட எஃப்.டி.க்களுக்கு 6.20 சதவிகித வட்டி கிடைக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் 8 ஜனவரி 2021 முதல் பொருந்தும்.

ALSO READ: SBI Alert! இந்த ‘2’ தேதிகளில் சில மணி நேரம் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது..!!

YES Bank அதிக வட்டியை அளிக்கின்றது

பெரிய அளவிலான அரசு மற்றும் தனியார் வங்கிகளைப் பற்றி பேசுகையில், YES Bank தற்போது FD-யில் அதிக வட்டி அளிக்கின்றது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவுக்கான FD-க்கு, ஐசிஐசிஐ வங்கி 2.50% முதல் 5.50%, HDFC வங்கி 2.50% முதல் 5.50%, ஆக்சிஸ் வங்கி 2.50% முதல் 5.75% வரையிலான ஆண்டு வட்டியை அளிக்கின்றன. இதில், ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது.

வங்கி FD-யின் நன்மைகள்

வங்கிகளின் நிலையான வைப்பு (Fixed Deposit) / கால வைப்பு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. முதலீட்டில் எந்த வித ஆபத்தையும் எதிர்கொள்ளாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வழியாகும். 5 வருட வரி சேமிப்பு FD களில் பிரிவு 80C இன் கீழ் வரி சேமிப்பு நன்மைகள் கிடைக்கின்றன. இருப்பினும், FD இலிருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது.

(குறிப்பு: வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்கள் வங்கிகளின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.)

ALSO READ: Yes Bank வாடிக்கையாளரா நீங்கள்? Reward Points பற்றிய ஒரு good news உங்களுக்கு…..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News