SBI FD வட்டி விகிதங்களை அதிகரித்தது, சமீபத்திய விகிதங்கள் இதோ

SBI Interest Rates: ரூ.2 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட டொமஸ்டிக் மொத்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2022, 02:49 PM IST
  • எஸ்பிஐ-யின் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
  • ரூ.2 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட டொமஸ்டிக் மொத்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்தியுள்ளது.
  • இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
SBI FD வட்டி விகிதங்களை அதிகரித்தது, சமீபத்திய விகிதங்கள் இதோ title=

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ-யின் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ரூ.2 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட டொமஸ்டிக் மொத்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்தியுள்ளது. 

மொத்த கால வைப்புகளில் பெரும்பாலானவற்றில் 40-90 bps அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று (மே 10) முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதத்தை பிபிஎஸ் உயர்த்தியது. இதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு மொத்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

- ஏழு முதல் 45 நாட்கள் வரையிலான டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி மாற்றாமல் மூன்று சதவீதமாக வைத்துள்ளது. 

- 46 முதல் 179 நாட்களுக்கான டெபாசிட்டுகளுக்கு 3 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி: வட்டி விகிதத்தை அதிகரித்தது HDFC வங்கி 

- 180 முதல் 210 நாட்களுக்குள் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம்  அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

- முன்பு 3.1 சதவீதமாக இருந்த இந்த சதவீதம் தற்போது 3.5 சதவீதமாக மாறியுள்ளது. 

- 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலவரையறை கொண்ட டெர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 3.3 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திலும் விலை உயர்த்தப்பட்டது
எஸ்பிஐ ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலவரையறை கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 3.6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதேபோல், இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலவரையறை கொண்ட டெபாசிட்களில் 3.6 சதவீதத்தில் இருந்து 4.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 65 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எஸ்பிஐ வங்கி மூன்று வருடங்கள் முதல் ஐந்து வருடங்களுக்கும் குறைவான மற்றும் ஐந்து வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவிற்கான வட்டி விகிதத்தை 3.6 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழக்கமான கட்டணத்தை விட 0.50 சதவீதம் கூடுதல் கட்டணம் வழங்கப்படும்.

முன்னதாக மார்ச் மாதத்திலும், மொத்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்தியது. அப்போது வங்கி வட்டி விகிதங்களை 20 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது. 

மார்ச் மாதத்தில், வங்கி 211 நாட்களுக்கான கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 3.1ல் இருந்து 3.30 சதவீதமாக உயர்த்தியது. இதேபோல், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு மொத்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டன. இந்த வட்டி விகிதங்கள் மார்ச் 10, 2022 முதல் அமலுக்கு வந்தன.

மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News