SBI Offer: விமானப் பயணிகளுக்கு SBI அளிக்கும் special offer என்ன தெரியுமா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க அவ்வப்போது புதிய சலுகைகளை அளித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2020, 10:46 AM IST
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா yatra.com உடன் இணைந்து இந்த சலுகையை வழங்கியுள்ளது.
  • இந்த சலுகை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.
  • கட்டணம் செலுத்தும்போது நீங்கள் கூப்பன் குறியீடான YTFLYNOW -ஐ பயன்படுத்த வேண்டும்.
SBI Offer: விமானப் பயணிகளுக்கு SBI அளிக்கும் special offer என்ன தெரியுமா title=

குளிர்கால விடுமுறை நாட்களில் நீங்கள் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், SBI உங்களுக்காக ஒரு நல்ல சலுகையை கொண்டு வந்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் உங்கள் விமான டிக்கெட்டை (Flight Ticket) முன்பதிவு செய்தால், டிக்கெட்டில் ஃபிளாட் 340 ரூபாய் தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே. சிறப்பு என்னவென்றால், இந்த சலுகைக்கு குறைந்தபட்ச முன்பதிவு தொகை எதுவும் வைக்கப்படவில்லை.

கூப்பன் குறியீடு பயன்படுத்தப்பட வேண்டும்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா yatra.com உடன் இணைந்து இந்த சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். இந்த சலுகையைப் பயன்படுத்த, டிக்கெட் விவரங்களை பூர்த்தி செய்த பிறகு கட்டணம் செலுத்தும்போது நீங்கள் கூப்பன் குறியீடான YTFLYNOW -ஐ பயன்படுத்த வேண்டும். நீங்கள் கூப்பன் குறியீட்டை உள்ளிட்டவுடன், சலுகையின் கீழ் உங்கள் கட்டணத்திலிருந்து ரூ. 340 குறைக்கப்படும்.

ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!

டிக்கெட்டுகளை இந்த வழியில் முன்பதிவு செய்யுங்கள்

இந்த சலுகையைப் பயன்படுத்த, முதலில் நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் யோனோ செயலியில் (YONO App) உள்நுழைய வேண்டும். உள்நுழைந்த பிறகு, நீங்கள் ‘Shop and Order’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கே நீங்கள் விமானம், ரயில் மற்றும் பஸ் ஆகியவற்றின் ஆப்ஷன்களைப் பெறுவீர்கள். இங்கே கிளிக் செய்த பிறகு yatra.com இன் ஆப்ஷனைப் பெறுவீர்கள். இந்த ஆப்ஷனை கிளிக் செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இதை மனதில் கொள்ளுங்கள்

இந்த சலுகையின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது விற்பனை, தரம், அம்சம், தயாரிப்பு அல்லது சேவை தொடர்பாக ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், அதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) தெளிவாகக் கூறியுள்ளது. வணிக பங்குதாரர் இதற்கு முழு பொறுப்பு வகிப்பார்.

SBI-ன் இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கும்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க அவ்வப்போது புதிய சலுகைகளை அளித்து வருகிறது. இப்போது SBI, yatra.com உடன் இணைந்து விமான பயணம் மேற்கொள்ளும் தனது வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகையை வழங்கியுள்ளது.

ALSO READ: புதிய ரயில் முன்பதிவு விதிகளை வெளியிட்டது IRCTC: இந்த வகையில் இனி booking இருக்கும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News