SBI அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான திட்டங்கள்... வாய்ப்பை தவற விடாதீர்கள்!

எஸ்பிஐ நாட்டின் மிகப்பெரிய வங்கியாகும். பல FD திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகிறது. வங்கி அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் மக்களின் பேராதரவைப் பெறுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 7, 2023, 03:37 PM IST
SBI அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான திட்டங்கள்...  வாய்ப்பை தவற விடாதீர்கள்! title=

எஸ்பிஐ நாட்டின் மிகப்பெரிய வங்கியாகும். பல FD திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகிறது. வங்கி அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் மக்களின் பேராதரவைப் பெறுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், SBI இன் இந்த FD திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் SBI We Care மற்றும் SBI Amrit Kalash ஆகிய இரண்டும் அடங்கும். ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதும் கூட. வருமானம் அதிகரிப்பதுடன் உங்கள் பணமும் பாதுகாப்பாக இருக்கும். இதனால் தான் எஸ்பிஐ வங்கி அநேகரின் முதல் விருப்பமாக உள்ளது.

எஸ்பிஐ வி கேர்  எஃப்டி திட்டம்  (SBI We Care FD ) 

எஸ்பிஐ வி கேர்  எஃப்டி திட்டம்  (SBI We Care FD ) குறிப்பாக வயதானவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இதில், நாட்டின் எந்த மூத்த குடிமகனும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிரந்தர வைப்புத் தொகையை செலுத்தலாம். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தால், செப்டம்பர் 30 வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது, ​​எஸ்பிஐ வி கேர் திட்டத்தில் 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ அம்ரித கலசம் எஃப்டியில் (SBI Amrit Kalash  FD) கிடைக்கும் வட்டி விகிதம்

SBI அம்ரித கலசம் திட்டம் 400 நாட்கள் FD திட்டமாகும். இந்த திட்டம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. எஸ்பிஐயின் இந்த திட்டத்தில், சாதாரண முதலீட்டாளர்களுக்கு 7.1 சதவீத வட்டியும், முத்த குடிமக்களுக்கு 7.6 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்த FD திட்டத்தில் ஆகஸ்ட் 15 வரை முதலீடு செய்யலாம். ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான 400 நாட்களுக்கான திட்டக்காலம் கொண்ட இந்த திட்டத்தில்  உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். 

மூத்த குடிமக்களுக்கு 50 bps கூடுதல் வட்டி

அதே நேரத்தில், எஸ்பிஐ 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 3% முதல் 7.1% வரை வட்டி செலுத்துகிறது. அதே நேரத்தில், FD களில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 50 bps கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | YONO for Every Indian: புதிய அவதாரம் எடுத்துள்ள SBI YONO... முழு விபரம் இதோ!

எஸ்பிஐ ஃபிக்சட் டெபாசிட் (SBI FD)  மீதான வட்டி சிகித விபரம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில், 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான நிலையான வைப்பு முதலீடுகளுக்கு 3% வட்டி, 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான நிலையான வைப்பு முதலீடுகளுக்கு (FD)  4.5% வட்டி, 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 5.25%, 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கு குறைவான எஃப்டிகளுக்கு 5.75 சதவீதம் வட்டி, 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD களுக்கு 6.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

YONO for Every Indian

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI)  கடந்த மாதம் தனது மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் பேங்கிங் செயலியான, 'YONO for Every Indian' மற்றும் இண்டரோபேரபிள் கார்டுலெஸ் கேஷ் வித்டிராவல் (Interoperable Cardless Cash Withdrawal -ICCW) வசதிகளை அறிமுகப்படுத்தியது. வங்கியின் 68வது வங்கி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதியை SBI அறிமுகப்படுத்தியது. எஸ்பிஐ வங்கி ஏற்கெனவே தனது வாடிக்கையாளர்களுக்காக யோனோ (YONO) என்ற மொபைல் செயலியை வைத்துள்ளது. இந்த யோனோ ஆப் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கி தனது யோனோ மொபைல்செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதிகள், சேவைகளுடன் புதிய யோனோ செயலியை அறிமுகப்படுத்தியது.

மேலும் படிக்க | விரைவில் பணக்காரர் ஆக வேண்டுமா..? இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் போதும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News