கருட புராணம்: இறந்த பிறகும் விடாது துரத்தும் கொடும் பாவங்கள் எவை தெரியுமா..!!

சில செயல்கள் பெரும் பாவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைச் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, இறந்த பின்னரும் சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவிப்பார்கள் என கருட புராணம் கூறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2021, 02:48 PM IST
  • சில நடவடிக்கைகள் கொடும் பாவமாக கருதப்படுகிறது
  • இந்தக் கொடிய பாவத்தைச் செய்வதைத் தவிர்ப்பது அவசியம்.
  • நரகத்தில் துன்பம் அனுபவிக்க நேரிடும்.
கருட புராணம்: இறந்த பிறகும் விடாது துரத்தும் கொடும் பாவங்கள் எவை தெரியுமா..!! title=

சிறந்த வாழ்க்கை, சுகமான மரணம், பிறகு சொர்க்கம் கிடைக்க நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். கருடபுராணத்தில் ஒருவர் எந்த மாதிரியான செயல்கள் செய்தால், அவர் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார், எந்தெந்த செயல்கள் அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்று மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கருடபுராணம் வாழ்வு, இறப்பு, இறந்த பின் ஆன்மாவின் பயணம் ஆகியவற்றைப் பற்றியும் கூறுவதால், கருடபுராணம் மகாபுராணம் என்றும் அழைக்கப்படுகிறது. கருடபுராணத்தில் மகாபாவங்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள அந்தச் செயல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மரணத்திற்கு பின் சித்திரவதை 

கருக்கலைப்பு: குழந்தையை வயிற்றிலேயே கொல்வதை விட பெரிய பாவம் இல்லை. கருடபுராணத்தில் இது பெரும் பாவம் என்று கூறப்பட்டுள்ளது. இதைச் செய்பவர்கள் நரகத்தில் மிகக் கொடுமையான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டும். எனவே தவறுதலாகக் கூட இதுபோன்ற தவறைச் செய்யாதீர்கள்.

பெண்களை இழிவுபடுத்துவது: சனாதன தர்மத்தில் பெண்களை இழிவுபடுத்துவது மிகவும் மோசமான செயலாக கருதப்படுகிறது. ஆதரவற்ற, விதவை பெண்ணை அவமதிப்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது. அப்படிப்பட்டவர்களின் ஆன்மா அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவிக்கிறது என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | ஏழரை சனியிலும் சனி பகவானின் அருளை பெறும் ‘4’ அதிர்ஷ்டக்கார ராசிகள்.!!

ஆதரவற்றவர்களை அவமதிப்பது: ஊனமுற்றோர், முதியோர் அல்லது ஆதரவற்றோர் எவரையும் அவமதிப்பது, கேலி செய்வது என்பது நரகத்திற்குச் செல்வதற்கான கொடும் பாவச் செயல்களாகும். அப்படிப்பட்டவர்கள் நரகத்தில் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.

ஆன்மீக நூலை அவமதித்தல்: கருட புராணத்தில் ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது ஆனால் தவறுதலாக வேறு எந்த மதத்தையோ அல்லது வேதத்தையோ அவமதிக்க கூடாது. இதை செய்தால், அவர்களுக்கு நரகத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும்.

ALSO READ | அருகில் நெருங்கினாலே உயிர்பலி கேட்கும் கொலைகார மரம்

மற்றவர் மனைவியின் மீது ஆசைப்படுவது: மற்றவர் மனைவியை தீய கண்ணால் பார்ப்பது, ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்துவது மகா பாவம். இது அந்தப் பெண்ணை அவமதிக்கும் செயல். இதைச் செய்பவர்கள் நரகத்தில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News