Aadhar Card Update: ஆதார் என்பது மத்திய அரசின் சார்பாக குடிமக்களுக்கு, தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும். UIDAI ஆனது ஆதார் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. வங்கிச் சேவைகள் முதல் அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது வரை - பல ஆண்டுகளாக ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள அட்டையாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த 12 இலக்க ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி, எந்த ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்கும் செல்லாமல் உங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
UIDAI இன்படி, மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை தங்கள் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்க வேண்டும். குறிப்பாக, இணைய இணைப்பு இல்லாமல் கூட ஆதார் அட்டை மூலம் உங்கள் வங்கு கணக்கு இருப்பை சரிபார்க்கும் சேவையை அணுக முடியும். இதனால் மூத்த குடிமக்கள், ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கிளைக்குச் செல்லாமல் தங்கள் வங்கி விவரங்களைச் பார்ப்பது எளிதாகியுள்ளது.
மேலும் படிக்க | வங்கியில் கடன் வாங்க திட்டமா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!
உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கு இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இங்கு காணலாம். கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஆதார் அட்டை மூலம் வங்கி கணக்கு இருப்பை சரிபார்ப்பது எப்படி?
உங்கள் வங்கி இருப்பை அறிய நான்கு எளிய வழிகள் உள்ளன.
உங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99*99*1# என்ற நம்பரை டயல் செய்யவும்.
உங்கள் ஆதார் அட்டையில் 12 இலக்க எண்ணை உள்ளிட தொடரவும்.
உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு சரிபார்க்க் வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்களுக்குக் கணக்கு இருப்பின் ஃபிளாஷ் எஸ்எம்எஸ் அனுப்பும்.
இதன் மூலம், நீங்கள் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும், அதன் விவரங்களும் வெளிவரும். இதனால், நீங்கள் வங்கிக்கோ அல்லது ஏடிஎம்களுக்கோ செல்லவே வேண்டாம்.
மேலும் படிக்க | Valentine Day 2023: காதலர் தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற யோசனைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ