தடிமனான, இளஞ் சிவப்பு உதடுகளை பெற சில எளிய வழிமுறைகள்!

நம் உதடுகளில் உள்ள தோல் மிகவும் உணர்திறன் மற்றும் மெல்லிய தன்மை கொண்டவை. மேலும் இது நமது சருமத்தின் மற்ற பகுதிகளை விட அதிக கவனிப்பு தேவை வேண்டுபவை.

Updated: Aug 23, 2019, 08:23 AM IST
தடிமனான, இளஞ் சிவப்பு உதடுகளை பெற சில எளிய வழிமுறைகள்!

நம் உதடுகளில் உள்ள தோல் மிகவும் உணர்திறன் மற்றும் மெல்லிய தன்மை கொண்டவை. மேலும் இது நமது சருமத்தின் மற்ற பகுதிகளை விட அதிக கவனிப்பு தேவை வேண்டுபவை.

உதடுகளை நாம் சரிவர கவனிக்காத காரணத்தால் அது, அடிக்கடி விரிசல், துண்டிப்பு போன்ற பிரச்சனைகளில் முடிவடைகிறது.

தடிமனான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளை வைத்திருக்க நாம் பெரிதும் விரும்புகிறோம். ஆனால் அதற்கான முறைமைகளை நாம் பின்பற்ற தவிர்கிறோம். நமக்கு விருப்பமான தடிமன், இளஞ்சிவப்பு உதடுகளை பெறுவதற்கு நாம் செய்யவேண்டிய சில விஷயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

உதடுகள் வறண்டு, நீரிழப்புடன் இருப்பதாக உணர்ந்தால் அவற்றை நாவினால் தடவி விடுவது நல்லது. உதட்டின் வழி பரவும் உமிழ்நீர் தற்காலிக நிவாரணத்தை வழங்கக்கூடும், ஆனால் உமிழ்நீர் காய்ந்தவுடன் உதடு மேலும் வறண்டு போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உதட்டு பகுதியில் எளிதில் விரிசல் ஏற்படக்கூடும். 

எனவே இந்த பிரச்சனையை தவிர்க்க, உடலில் நீர் சத்து குறையாமல் பாரத்துக்கொள்வது நல்லது, அதாவது தொடர்ந்து நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும் திரவ உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்.

சிறிது தேனுடன் சிறிதளவு சர்கரையை சேர்த்து, உதடுகளில் தடவுவதன் மூலம் உதட்டின் ஈரத்தன்மை காக்க இயலும். இந்த வீட்டு தயாரிப்பு நிவாரணியை கொண்டு உதடுகளை ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் கழுவ வேண்டும். இது இறந்த சரும செல்களை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உதடுகளை சரியாக ஈரப்பதத்தில் பராமரிக்க, இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. ரசாயன அடிப்படையிலான தயாரிப்பைப் பயன்படுத்துவதை விட இது சிறந்தது. ஒருவேளை லிப் பாம் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தினால், குறைவான வேதிப்பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் கொண்ட ஒன்றைப் பயன்படுத்த முயற்சிக்கவும். அல்லது சிறிது அளவு தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை தடவுவது நல்லது.

அதேவேளையில் உதடுகளை ஒளிரச் செய்ய வீட்டு முறை தயாரிப்புகளை பயன்படுத்துதல் நல்லது. அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உதடுகளை ஒளிரச்செய்ய, இயற்கையான பொருட்கள் (தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை கலவையை) தடவவும். எலுமிச்சை இயற்கையான வெளுக்கும் குணங்களைக் கொண்டுள்ளது மற்றும் தேங்காய் எண்ணெய் உங்கள் உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

அதேப்போல் பீட்ரூட் உங்கள் சருமத்தை வெளுக்கும், பீட்ரூட் சருமத்தை கரைப்படுத்தும், எனினும் இது உங்கள் உதடுகளுக்கு சிறந்தது. பீட்ரூட் சாறு மற்றும் தேன் கலவையை ஒரு இரவு உதட்டில் வைத்து தூங்கி எழுந்தால் பீட்ரூடின் பலன் உங்களுக்கு தெரியும். இது உங்கள் உதடுகளை மென்மையாக்கி இளஞ்சிவப்பு மற்றும் ஆரோக்கியமாக மாற்றும்.

அதேவேளையில் உங்கள் உதடுகளுக்கு புற ஊதா கதிர்களிடமிருந்தும் பாதுகாப்பு தேவை, புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்தை விட அதிக உணர்திறன் கொண்டவை. உலர்ந்த உதடுகளில் லிப்ஸ்டிக் தடவுவதை தவிர்க்கவும். படுக்கைக்குச் செல்லும் முன் லிப்ஸ்டிக் அதற்றுதல் நல்லது. ஒப்பனை அகற்றாமல் தூங்குவது உங்கள் சருமத்துக்கே கேடாய் முடியலாம். நம் அழகை பராமரிக்க நாம் நான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.