ராகு பெயர்ச்சி 2022: இந்த ‘6’ ராசிக்காரர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை..!!

ரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2022 வரும் ராகு பெயர்ச்சி  6 ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 30, 2021, 02:51 PM IST
ராகு பெயர்ச்சி 2022: இந்த ‘6’ ராசிக்காரர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை..!!

புதுடெல்லி: ஜாதகத்தில் மிகவும் அசுப யோகங்களை உருவாக்கும் கிரகங்களில், ராகு முக்கிய இடம் வகிக்கிறது. ராகு ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் இருந்தாலும், ராசி மாறும்போதெல்லாம் பல தாக்கங்களை உருவாக்குகிறது. 2022 ஆம் ஆண்டில் ராகு ராசியை மாற்றுவார்.  2022 ஏப்ரல் 12ஆம் தேதி ராகு பெயர்ச்சியில்,  ராகுமேஷ ராசிக்கு பிரவேசிக்கிறது. இந்த மாதத்தில் சனிப்பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த மாற்றங்கள் 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் ராகுவால் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பை சந்திக்க நேரிடும். இது தவிர, தொழிலில் அதிக மன அழுத்தத்தையும் உணர்வீர்கள். மனதில் தொழில் சம்பந்தமான பாதுகாப்பின்மை உணர்வு அதிகமாக இருக்கும். முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். தவறுதலாக கூட விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் ராகு பெயர்ச்சிக்கு பிறகு தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்வார்கள். இதனால் முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படும். எனவே புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். பண இழப்பு ஏற்படலாம்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே பொறுமையுடன் செயல்படுங்கள். மன உளைச்சல் அதிகாமாக இருக்கலாம். இருப்பினும், வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது நல்ல பலனைத் தரும். 

கன்னி: 2022-ம் ஆண்டு ராகுவால் கன்னி ராசிக்காரர்களின் மனநிலை பாதிக்கப்படும். பிறருடன் மோதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நோய் அல்லது காயத்தால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். பணியிடத்தில் நிலைமை முரண்பாடாக இருக்கலாம்.

ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு திருமண, காதல் வாழ்க்கையில் ராகு சஞ்சலத்தை ஏற்படுத்தலாம். உங்கள் துணையுடனான உறவில் பெரிய மாற்றம் ஏற்படலாம். உறவு முறியும் வரை இந்த விவகாரம் தொடரலாம்.  புகழுக்கு கேடு உண்டாகலாம். பண இழப்பும் ஏற்படலாம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் நீதிமன்றங்களைச் சுற்றி வர வேண்டியிருக்கும். அதே நேரத்தில், பழைய வழக்குகள் நடந்து கொண்டிருந்தவர்கள், இப்போது நிவாரணம் பெறலாம். மனக் குழப்பம் ஏற்படும். தியானம் செய், அது பலன் தரும்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News