புதிய சாதனை உச்சத்தில் சூர்யா-ன் "சொடக்கு மேல" பாடல்!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

Last Updated : Jun 22, 2018, 10:39 AM IST
புதிய சாதனை உச்சத்தில் சூர்யா-ன் "சொடக்கு மேல" பாடல்! title=

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில்  உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் அனிருத் இசையில் பிரபல பாடகர் ஆந்தோனி தாசன் குரலில் உருவான ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்த பாடலை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர் பார்த்துள்ளனர்.

 

Trending News