''மிஸ் இந்தியா'' பட்டம் பெற்ற தமிழ்மங்கை அனுகீர்த்தி வாஸ்!

தமிழகத்தை மங்கையான அனுகீர்த்தி வாஸ் ''மிஸ் இந்தியாவாக'' தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Jun 20, 2018, 09:05 AM IST
''மிஸ் இந்தியா'' பட்டம் பெற்ற தமிழ்மங்கை அனுகீர்த்தி வாஸ்!  title=

இந்திய அழகிக்கான தேர்வு போட்டி நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக மங்கையான அனுகீர்த்தி வாஸ் ''மிஸ் இந்தியா'' வாக முடி சூட்டப்பட்டுள்ளார். ''மிஸ் இந்தியா போட்டியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். 

இதில், இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற 30 பேரில் தமிழகத்தை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் ''மிஸ் இந்தியாவாக' தேர்வு செய்யப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 19-வயது நிறைத்த அனுகீர்த்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். நடிப்பு, மாடலிங் என பல துறைகளில் இவர் திறமையுடன் இருப்பதால் அவருக்கு இந்த மகுடம் சூட்டப்பட்டுள்ளது. இதுவரை இவர் தொடர்ந்து, 2ம் இடத்தில் ஹரியானாவின் மீனாட்சி, 3ம் இடத்தில் ஆந்திராவின் ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, ''மிஸ் இந்தியா'' பட்டம் பெற்ற தமிழ்மங்கை அனுகீர்த்தி வாஸ் இந்த வருட இறுதியில் நடக்கும் உலக அழகிப்போட்டியில் பங்கேற்கிறார்.

Trending News