Tamil New Year 2021: பிலவ வருட தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்றால், ஆண்டு முழுவதும் மங்கா செல்வம் கிடைக்கும்?

சித்திரை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் மரபு தமிழர்களுடையது. சித்திரை மாத முதல் நாளில் தமிழ் வருடப் பிறப்பை தமிழர்கள் தங்கள் வீடுகளில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 14, 2021, 08:22 AM IST
  • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • பிலவ ஆண்டு பிறந்தது
  • சித்திரை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் மரபு தொன்று தொட்டு தொடர்வது
 Tamil New Year 2021: பிலவ வருட தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்றால், ஆண்டு முழுவதும் மங்கா செல்வம் கிடைக்கும்?  title=

சித்திரை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் மரபு தமிழர்களுடையது. சித்திரை மாத முதல் நாளில் தமிழ் வருடப் பிறப்பை தமிழர்கள் தங்கள் வீடுகளில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த காலகட்டத்தில் வரும் மாத பிறப்பு தினம் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் பைஷாகி, கேரளாவில் விஷு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் உகாதி அல்லது யுகாதி, அசாமில் பிஹு என பல்வேறு மாநிலத்தவருக்கும் முக்கியமான காலகட்டம் இது.

சித்திரை முதல் நாளன்று புத்தாண்டை வரவேற்க செய்யக்கூடிய பூஜைகளை பற்றிய முறையான விவரங்களையும், அதற்குரிய பலன்களையும் தெரிந்து கொள்வோம்.
தமிழ் வருடப்பிறப்பு என்றாலே காலையில் கண் விழித்தவுடனே பழங்களை பார்த்தால், அந்த ஆண்டு முழுவதும் கனிவாக, நல்ல பலன் கொடுப்பதாக இருக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

அதிலும் ஒரு கண்ணாடியின் முன் பழ வகைகளை வைத்துவிட்டு காலையில் எழுந்து கண்ணாடி மூலம் மங்கலமானபொருட்களை பார்த்தால் ஆண்டு முழுவதும் நல்ல விஷயங்களாக நடக்கும் என்பது நம்பிக்கை.

Also Read | ரம்ஜான் நோன்பில் நாள் முழுதும் உற்சாகமாக இருக்க Food Tips

இதற்கான தயாரிப்பாக, கண்ணாடிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூச்சூடி, பூஜை அறையில் கிழக்கு பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கண்ணாடியின் முன்பு பெரிய தாம்பூலத் தட்டில் ரூபாய் நோட்டுக்கள் நகைகளையும், முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றை வைக்க வேண்டும்.  

சிறு சிறு கிண்ணங்களில் நவதானியங்கள், அரிசி, பருப்பு, உப்பு, வெல்லம், மஞ்சள் ஆகியவற்றை வைக்க வேண்டும். காலையில் நேராக பூஜை அறைக்கு சென்று கண்ணாடியில் கனி காணுதல் என்ற சம்பிரதாயத்தை முடித்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் குளித்து முடித்து விட்டு நைவேத்தியங்களை தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் பச்சை கற்பூரம் மற்றும் பூக்களை போட்டு வையுங்கள்.

Also Read | பக்தர்கள் அதிருப்தி! திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் ரத்து!

நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயாசம் செய்து வைக்கலாம். 6 வகையான சுவைகளும் இருக்கும் படி உணவு தயார் செய்வது கூடுதல் பலன் தரும். 

வீடு முழுவதும் மாவிலைத் தோரணங்கள் கட்டி வைப்பதும் சிறப்பைத் தரும். மாவிலை தோரணங்களில் இருந்து வரும் தெய்வீக ஆற்றல் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை அழிக்கும். 

புதிய துணிமணிகள் வாங்கி வைத்திருந்தால் அதை பெரியவர்களின் கைகளிலிருந்து பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது. புத்தாண்டு தினத்தன்று அன்னதானம் செய்வது நன்று. 

கனிகளை போல சுவையான ஒரு வாழ்வை இவ்வாண்டு முழுவதும் நாம் பெறவே கனி காணுதல் நிகழ்வு சித்திரை தமிழ் புத்தாண்டு அன்று அனுசரிக்கப்படுகிறது. மிக எளிமையாக வீட்டிலேயே வரவிருக்கும் ஸ்ரீ பிலவ புத்தாண்டை வரவேற்று பூஜைகளை செய்து இறை அருளைப் பெருவோம்.

Also Read | பிரிந்தவரையும் ஒன்று சேர்க்கும் மகிமை வாய்ந்த சோமவார விரதம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Trending News