Rasipalan 24 July: இன்றைய ராசிபலன் (24 ஜூலை 2021) என்ன சொல்கிறது?

சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2021, 05:29 AM IST
Rasipalan 24 July: இன்றைய ராசிபலன் (24 ஜூலை 2021) என்ன சொல்கிறது? title=

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே... 

ராசிபலன் - 24-07-2021

மேஷம்: வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் தனவரவுகள் மேம்படும். கால்நடைகளின் மூலம் வருமானமும், முதலீடுகளும் அதிகரிக்கும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம்: மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனமாக இருக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும்.

Also Read | அள்ளிக் கொடுக்கும் ஆடி வெள்ளி விரத வழிபாடு

கடகம்: மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் அகலும்.

சிம்மம்: வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உபரி வருமானம் மேம்படும். அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய தெளிவும் ஏற்படும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

கன்னி: மன்றம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்வும், மேன்மையும் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்:  உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். வியாபார விருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

Also Read | தேடி வந்திருக்கும் ஆடி வெள்ளியில் அன்னையை வழிபடுவதால் என்ன நன்மை? இதோ..

விருச்சிகம்: மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும்.

தனுசு: புதிய நபர்களின் அறிமுகமும், ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும்.

மகரம்: தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அவ்வப்போது பழைய நினைவுகள் மற்றும் பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும்.

கும்பம்: கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.

மீனம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் அலைச்சல்கள் இருந்தாலும் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

Also Read | முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்தி ஆலயங்கள், உங்களுக்கு அருகிலேயே…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News