நீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம் பிடித்தார் The Rock!

நடிகர் டிவைன் ஜான்சன் எனும் 'தி ராக்' தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ரகசிய திருமணம் செய்துள்ளார்!

Updated: Aug 20, 2019, 01:52 PM IST
நீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம் பிடித்தார் The Rock!

நடிகர் டிவைன் ஜான்சன் எனும் 'தி ராக்' தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ரகசிய திருமணம் செய்துள்ளார்!

பிரபல ரெஸ்லராக இருந்த  'தி ராக்' நடிப்புலகில் காலடி எடுத்து வைத்து தற்போது நடிகராகவே பலருக்குப் பரிச்சயபடுகிறார். 2001-ஆம் ஆண்டு வெளியான 'தி மம்மி ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், அதனை தொடர்ந்து ’பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படங்களில் இவர் லூக் ஹாப்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். 

இறுதியாக அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த 'ஹாப்ஸ் அண்ட் ஷா' படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இத்திரைப்படங்களை தவிர அவர் நடிப்பில் வெளியான 'சான் ஆன்ட்ரியாஸ்', 'ஜுமான்ஜி', 'பேவாட்ச்' ஆகிய திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மோவானா அனிமேஷன் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரமான மோவிக்கு இவர்தான் டப்பிங். அதில் பாடலும் பாடியிருப்பார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

We do. August 18th, 2019. Hawaii. Pōmaikaʻi (blessed) @lau 

A post shared by therock (@therock) on

இந்நிலையில் டிவைன் ஜான்சன் தனது நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ஞாயிறு அன்று மியாமியில் மணந்துகொண்டார். இவர்களது திருமணம் மியாமி கடற்கரையில் பெரிய ஆரவாரம் இன்றி ரகசியமாய் நேற்று நடைபெற்றது. 12 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் வெள்ளநிற ஆடையில் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தி ராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

நடிகர் டிவைன் ஜான்சனுக்கு, டானி கார்சியா என்பவருடன் 1997-ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2007-ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தனது இரண்டாவது திருமணத்தை ராக் முடித்துள்ளார். சென்ற வருடம் வசந்த காலம் என்று அழைக்கப்படும் இந்த ஆகஸ்டில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்துள்ளனர் இத்தம்பதியர், ஆனால் லாரென் கருவுற்ற நிலையில் தங்களது இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் இந்த வருட வசந்த காலத்தில் திருமணத்தை செய்துகொண்டதாக இந்த காதல் ஜோடி கூறியுள்ளது.