நமக்கு வரும் துன்பங்களுக்கு இந்த விஷயங்கள் கூட காரணமாக இருக்கலாம்..

வீட்டில் பெண்கள் செய்யக்கூடிய இந்த சின்ன சின்ன தவறுகளும், கஷ்டம் வருவதற்கு ஒரு காரணம். அது என்னென்ன தவறுகள்? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

Last Updated : Dec 8, 2020, 06:20 AM IST
நமக்கு வரும் துன்பங்களுக்கு இந்த விஷயங்கள் கூட காரணமாக இருக்கலாம்..  title=

வீட்டில் பெண்கள் செய்யக்கூடிய இந்த சின்ன சின்ன தவறுகளும், கஷ்டம் வருவதற்கு ஒரு காரணம். அது என்னென்ன தவறுகள்? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாகவே ஒரு வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அது அந்த வீட்டின் பெண்ணின் கையில் தான் உள்ளது. எவ்வளவு தான் கஷ்டம் இருக்கக்கூடிய இடத்தில் பெண் குழந்தை பிறந்தாலும் கூட, அந்த பெண் குழந்தையின் மூலம் அந்த வீட்டிற்கு ஏதாவது ஒரு வகையில், ஏதாவது ஒரு நாள், நிச்சயம் யோகம் வரும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஏனென்றால் பெண் குழந்தைகள் மகாலட்சுமியின் சொரூபமாக சொல்லப்படுகிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் தெரியாமல் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகளின் மூலம் அந்த குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்து இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அது என்னென்ன தவறுகள் என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

என்னதான் ஒருவருக்கு அதிர்ஷ்டம் வரக்கூடிய யோகம் இருந்தாலும், அந்த அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில் தான் உள்ளது. அதற்கு தகுந்தவாறு தான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் பெண்கள் எந்த தவறுகளை கட்டாயம் செய்யக் கூடாது.

ALSO READ | எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்?

பெண்கள் கிழிந்த ஆடையை அணிந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் பூஜை செய்யும் போது, நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடை நீங்கள் உடுத்தியிருக்கும் புடவை, புதிய புடவையாக இருந்தாலும் சரி, அதில் சிறிய அளவிலான ஓட்டை, சிறிய அளவிலான கிழிசல் கூட இருக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

புரிகிறதா? நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடை புதிய ஆடையாக இருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக ஊதுவத்தி பட்டோ அல்லது வேறு ஏதாவது ஆணியில் மாட்டியோ, அதில் கிழிசல் ஏற்பட்டு இருந்திருக்கலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் அந்தத் துணியை புதியதாக வாங்கும் போதே அதில் ஏதேனும் டேமேஜ் இருந்திருக்கலாம். இப்படி இருக்கும் பட்சத்திலும் அந்த குறிப்பிட்ட ஆடையை வெள்ளிக்கிழமைகளில் செவ்வாய்க்கிழமையில் பூஜை செய்யும்போது, அது புதிய ஆடை தானே என்று சொல்லி அணியவே கூடாது.

முக்கியமாக நீங்கள் குலதெய்வ கோவில்களுக்கு செல்லும் போது இப்படிப்பட்ட கிழிந்த ஆடையை உடுத்தாமல் இருப்பது நல்லது. (நீங்கள் வீட்டில் வேறு ஏதாவது உபயோகத்திற்கு பயன்படுத்தும் கந்தை துணியாக இருந்தாலும் சரி, அது அழுகாக இருக்கலாமே தவிர, பழைய துணியாக இருக்கலாமே தவிர, அதிகப்படியாக கிழிந்த துணியை, துடைப்பதற்கோ அல்லது மற்ற பயன்பாட்டிற்கு கூட உபயோகப்படுத்தக் கூடாது.) அடுத்தபடியாக வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கட்டாயம் நகம் வெட்டக்கூடாது. வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது வீட்டில் ஐஸ்வர்யத்தை நிலைத்து நிற்க செய்யும்.

ALSO READ | புதுமணப்பெண் புகுந்த வீட்டில் குத்து விளக்கு ஏற்றுவதற்கான காரணம் தெரியுமா?

இதேபோல் பெண்கள் குலதெய்வ கோவில்களுக்குச் செல்லும் போது, உங்களுடைய குளம் என்றைக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, நிச்சயம் கொடிமரத்திற்கு முன்பாக நமஸ்காரம் செய்து வணங்கி, கொடி மரத்தின் நிழல் விழும் இடத்தையோ அல்லது கோபுரத்தின் நிழல் விழும் இடத்தையோ உங்கள் வலது கை மோதிர விரலால் தொட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

குலதெய்வ கோவிலுக்கு முடிந்தவரை உங்களது குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்வது நல்லது. அதாவது அங்காளி பங்காளிகளோடு தான் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி குடும்பத்துடன் உங்கள் குலதெய்வ கோபுரத்தை, கொடிமரத்தை தலை உயர்த்தி பார்த்து கையேந்தி உங்களது குளம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

உங்களுடைய குலதெய்வம் கோவிலுக்கு கோபுரம் இல்லை என்றால், கொடிமரம் இல்லை என்றால், அந்த கோவிலின் உச்சிப் பகுதியை பார்த்து நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். சில பேர் குலதெய்வத்திற்கு கோவில் கூட இருக்காது. சிறிய மரத்தடியில் செங்கலை குல தெய்வமாக தரிசனம் செய்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த மரத்தை மேல் நோக்கி பார்த்து தரிசனம் செய்தால் கூட போதுமானது.

ALSO READ | எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்..

குலதெய்வ கோவிலுக்கு சென்றோம் வந்தோம் என்று இல்லாமல், அந்த குலதெய்வத்தை முறைப்படி தரிசனம் செய்து, கோபுர தரிசனத்தை செய்து, கோடி புண்ணியத்தை பெற்று வீட்டில் வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க பெண்கள், மேல் சொல்லப்பட்ட விஷயங்களை கட்டாயம் கடைபிடிப்பது நல்லது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News