சமீபத்தில், கிரக நிலைகளில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிரகங்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்வது, ராசிகளை மாற்றுவது ஆகியவை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் வியாழன் கிரகம் தனது ராசியை மாற்றிக் கொண்டு கும்பத்தில் நிழைந்தது அனைவருக்கு தெரிந்ததே.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும், இதன் காரணமாக வணிகம் தொடர்பான முன்னேற்றம் உண்டா கும். இந்த மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த குரு பெயர்க்ச்சியினால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய 5 ராசிக்காரர்கள் காட்டி மழை தான்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள். இது தவிர, அவர்கள் சந்தித்து வந்த தடைகள் அனைத்து, நீங்கி, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அவர்கள் வீட்டுக் கதவை தட்டும் வாய்ப்புள்ள. இந்த ராசிக்காரர்களின் திறமைக்கு உலகமே சாட்சியாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இளைஞர்கள் ஆர்வத்துடன் பணிபுரிவார்கள், புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. அவர்களது குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். வரும் நான்கு மாதங்கள் கொண்டாட்டமான காலமாக இருக்கும்.
ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!
சிம்மம்
இந்த குரு பெயர்ச்சியின் மூலம் சிரமத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கியுள்ளன. இவர்களின் வீடு, நிலம், கார் எடுக்கும் கனவு நனவாகும். இந்த நேரத்தில் மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள். அரசியல் துறையில் உங்கள் ஆதிக்கம் நிலைத்திருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய வேலையைப் பெறலாம். இது தவிர, பணம் பெறுவதற்கான வாய்ப்பும் இவர்களின் வாழ்க்கையில் உருவாகி வருகிறது. தடைபட்ட பணிகள் தொடரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் வெற்றிக் குறிக்கோளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை அன்பாகவும் இனிமையாகவும் நடத்துவார். தட்பவெப்ப நிலையால் தொந்தரவு ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல நாளில் புதிய வேலையைத் தொடங்குவது நல்ல பலனை தரும். நீங்கள் பணத்தை முதலீடு செய்யும் இடத்தில், உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR