ஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் பிரபல இறுதியாளர்...!

மிகவும் பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோ பிக் பாஸ் மூன்றாம் சீசனின் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் சாண்டி

Last Updated : Nov 30, 2020, 12:20 PM IST
    1. பிக் பாஸின் மூன்றாவது சீசனின் பொழுதுபோக்கு போட்டியாளர்களில் சாண்டி ஒருவராக இருந்தார்.
    2. கோலிவுட்டில் பல வெற்றிகரமான திரைப்படங்களில் சாண்டி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.
    3. இவர் பிரபல நடன இயக்குனர் ஆவார்.
ஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் பிரபல இறுதியாளர்...!

மிகவும் பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோ பிக் பாஸ் மூன்றாம் சீசனின் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் சாண்டி. இவர் பிரபல நடன இயக்குனர் ஆவார். கோலிவுட்டில் பல வெற்றிகரமான திரைப்படங்களில் சாண்டி மாஸ்டர் பணியாற்றியுள்ளார். 

பிக் பாஸின் (Bigg Boss Tamilமூன்றாவது சீசனின் பொழுதுபோக்கு போட்டியாளர்களில் சாண்டி ஒருவராக இருந்தார். தற்போது சாண்டி (Sandy) மாஸ்டர் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருடன் பிக் பாஸ் போட்டியாளர்கள் சரவணன், ரேஷ்மா ஆகிய இருவரும் இணைந்து உள்ளனர். 

ALSO READ | சுரேஷ் சக்ரவர்த்தியுடன் ஜூலி எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ! இது எப்போ?

இயக்குனர் சந்துரு எனபவர் இயக்கும் த்ரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் சாண்டி நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார். ஒரு கொலை மர்மமான முறையில் நடப்பதும் அந்தக் கொலையின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து சாண்டி கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பதாகவும் தெரிகிறது.இந்த படத்தை சந்துருவின் சகோதரி தயாரிக்கும். சதீஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ALSO READ | சோகத்தில் மூழ்கிய லாஸ்லியா- இப்படி ஒரு கொடுமையா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News