Budhan Peyarchi 2022 Palangal: புதன் பெயர்ச்சியால் கோடீஸ்வரயோகம் கிடைக்கும் ராசிகள்

புதன் பெயர்ச்சியால் இந்த ஆண்டு கோடீஸ்வர யோகம் சில ராசிகளுக்கு கிடைக்கப்போகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 25, 2022, 05:38 AM IST
  • விரைவில் புதன் கிரகத்தின் பெயர்ச்சி
  • ஜூலை மாதம் நடைபெறுகிறது
  • புதன் பெயர்ச்சி 2022 நேரம் மற்றும் தேதி
Budhan Peyarchi 2022 Palangal: புதன் பெயர்ச்சியால் கோடீஸ்வரயோகம் கிடைக்கும் ராசிகள் title=

ஜோதிடத்தின்படி எந்த ராசி மாற்றம் ஏற்பட்டாலும், அனைத்து ராசிகளின் நிலைகளிலும் மாற்றம் உண்டாகும். இதன்மூலம் சிலருக்கு நன்மையும், சிலருக்கு சங்கடங்களும் உண்டாகும். இந்த ஆண்டு புத்திக்கும் பேச்சுக்கும் அதிபதியாக இருக்கும் புதன், ஜூலை மாதம் பெயர்ச்சி அடைந்து மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார். இதன் மூலம் சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் அடிக்கப்போகிறது. 

புதன் பெயர்ச்சி 2022

ஜோதிட சாஸ்திரங்களின்படி, புதன் கிரகமானது ஜூலை 2 ஆம் தேதி காலை 9.40 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவர் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட அதிபதியாக இருக்கும் மிதுன ராசிக்கு செல்கிறார். அவரின் வருகை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புதன் கிரகத்தின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் அடிக்கப்போகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஏழைரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

கன்னி

புதன் கிரக பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஸ்திரத்தன்மையை உருவாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். புதன் கிரகத்தின் வருகையால் முடிவெடுக்கும் திறன் வளரும். சுயாதீனமாக முடிவுகளை எடுப்பீர்கள்

மகரம் 

நீண்ட நாட்களாக கடினமாக உழைத்து வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் வரும். பணியிடத்தில் பணி பாராட்டப்படும். உத்தியோகத்தில் பெரியவர்களின் பாராட்டு கிடைக்கும். மகர ராசியினருக்கு, இந்த பெயர்ச்சி பண ஆதாயங்களின் அடிப்படையில் பயனுள்ளதாக இருக்கும். பண வரவு அமோகமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பண வரவு கிடைக்கும். அதுமட்டுமின்றி உங்கள் விருப்பத்தையும் நிறைவேற்றுவீர்கள். தொழிலில் வளர்ச்சி இருக்கும். மேலும், இது தொடர்பான புதிய வாய்ப்புகளையும் காணலாம். அதே சமயம், இந்த நேரத்தில் முடிவுகளை எடுப்பதில் நம்பிக்கை அதிகரிக்கும். இந்த புதனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண பலன்களை தரும். பல புதிய வழிகள் மூலம் பண வரவுகள் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி 2022: இந்த ராசிகளின் ஜாதகத்தில் உண்டாகும் குபேர யோகம்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News