Vastu Tips: உங்கள் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்ட எளிய வாஸ்து குறிப்புகள்!!

வாஸ்துவின் படி, குழந்தைகளின் படிப்பு அறை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் கட்டப்பட வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு திசையில் எப்போதும் படிப்பு அறையில் புத்தகங்களை வைக்கவும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2020, 03:45 PM IST
  • படிப்பில் கவனம் செலுத்துவதற்கு படிக்கும் இடம் அல்லது படிப்பு அறையை சரியாக அமைப்பது மிகவும் முக்கியம்.
  • ஞானத்தின் கடவுளான விநாயகர் அல்லது அறிவின் தெய்வமான சரஸ்வதியின் படத்தை குழந்தைகளின் படிக்கும் அறையில் வைக்கலாம்.
  • மாணவர்களின் அறையில் மயில் தோகையை வைத்தால், படிப்பு மீது கவனம் செல்லும்.
Vastu Tips: உங்கள் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்ட எளிய வாஸ்து குறிப்புகள்!! title=

இன்றைய காலகட்டத்தில், கல்வி மற்றும் வாழ்க்கைக்கான போட்டி மிகவும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை படிப்பில் சிறப்பாகச் செயல்பட வேண்டும், விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் சில சமயங்களில் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செல்வதில்லை. படிக்கும் போது அவர்களால் அதில் மனதை முழுமையாக செலுத்த முடிவதில்லை.

இதன் காரணமாக பெற்றோர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

வாஸ்துவில் (Vastu) ஒவ்வொரு இடத்திற்கும் விதிகள் உள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, படிப்பில் கவனம் செலுத்துவதற்கு படிக்கும் இடம் அல்லது படிப்பு அறையை சரியாக அமைப்பது மிகவும் முக்கியம். படிக்கும் இடத்தில் அல்லது அறையில் சில விஷயங்கள் சரியாக இல்லாமல் போனால், ஒருவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே வாஸ்துவின் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

வாஸ்துவின் கூற்றுப்படி, எப்போதும் உத்திரத்தின் (beam) கீழ் படிக்கக்கூடாது. அப்படி படிப்பதால், படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே, படிக்கும் அறையில் உத்திரம் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி உத்திரம் இருந்தால், அங்கே ஒரு புல்லாங்குழலைத் தொங்க விடுங்கள். இது அந்த இடத்தின் வாஸ்து தோஷத்தின் விளைவைக் குறைக்கும்.

வாஸ்துவின் படி, குழந்தைகளின் படிப்பு அறை வடக்கு, கிழக்கு (East) அல்லது வடகிழக்கு திசையில் கட்டப்பட வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு (North) திசையில் எப்போதும் படிப்பு அறையில் புத்தகங்களை வைக்கவும்.

குழந்தைகள் படிக்கும் மேசையில் ஒரு பூகோளம் (Globe) அல்லது செப்பு பிரமிடு ஆகியவற்றை வைப்பது பொருத்தமானது. இது குழந்தை படிப்பில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும்.

ALSO READ: Vastu Tips: ஆரோக்கியமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம் அளிக்கும் ‘Vastu for Medicines’

ஞானத்தின் கடவுளான விநாயகர் (Lord Vinayaga) அல்லது அறிவின் தெய்வமான சரஸ்வதியின் (Goddess Saraswati) படத்தை குழந்தைகளின் படிக்கும் அறையில் வைக்கலாம்.

சில காரணங்களால் குழந்தைகள் படுக்கையறையில் படித்தால், படிக்கும் போது, ​​குழந்தை எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி படிக்க வேண்டும்.

படிக்கும் போது, ​​மாணவர்கள் எப்போதும் தெற்கு திசையை நோக்கி படிக்கக்கூடாது. இது குழந்தைகளில் ஒழுக்கமின்மைக்கு வழிவகுக்கிறது.

படிக்கும் இடத்தில் குடிநீர் மற்றும் கடிகாரம் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும்.

படிப்பதில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களின் அறையில் மயில் தோகையை வைக்கலாம். இதனால் படிப்பு மீது கவனம் செல்லும். 

ALSO READ: Vastu Tips: ஆனந்தம் கொண்டாடும் வீடு! எளிய tips, பெரிய வாழ்க்கை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News