பொய் செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க 20 குழுக்கள்: வாட்ஸ் ஆப் அறிவிப்பு

இனி வாட்ஸ் ஆப் தவறான தகவல்களைப் பரப்பினால், உங்களை கண்காணிக்க 20 குழுக்கள் அமைத்தது வாட்ஸ் ஆப் நிறுவனம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2018, 09:24 AM IST
பொய் செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க 20 குழுக்கள்: வாட்ஸ் ஆப் அறிவிப்பு title=

உலகம் முழுவதும் "வாட்ஸ் ஆப்", "பேஸ்புக்" போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் போலி செய்திகள் அதிகமாக பரப்பட்டு வருகிறது. இதனால் சில சமயங்களில் உயிர் பலிக் கூட ஏற்ப்படுகிறது. 

மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும் வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய செய்திகள் மற்றும் வதந்திகளைத் தடுக்கவும், நீக்கவும் வேண்டும் எனக் கூறி, வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துப்பட்டது.

இந்நிலையில், "வாட்ஸ் ஆப்" தகவல்களை சரிபார்க்கவும், கண்காணிக்கவும் சர்வதேச அளவில் 20 குழுக்களை அமைத்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். மேலும் இந்த குழுக்களில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending News