காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர்.
துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் மெரினா, தலைமை செயலகம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம், மதுராங்கத்தில் நடைப்பெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உரையாற்றியதோடு, மணமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அவர்களை போலீஸார் கைது செய்தனர். 144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்பது கூட தெரியாமல் முதல்வர் உள்ளார் என தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருப்பவர்கள் விரைவில் எந்தெந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நாடு பார்க்கும் என்றும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து புதுமண தம்பதியுடன் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்தனர்!