சமீபத்தில் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அயன்’. தேவா கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா, வெளிநாடுகளில் இருந்து பல பொருட்களை இந்தியாவிற்கு கடத்தும் நபராக நடித்திருந்தார். அவருக்கு குருவாக தாஸ் கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருந்தார். கடத்தல் உலகம், போலீஸ் ரெய்டு, விமானத்துறை அதிகாரிகள், தமன்னாவுடனான காதல் என அயன் படம் விறுவிறுப்புடன் இருந்தது. மிகுந்த சுவாரஸ்யத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதை அம்சங்களுடன் வெளிவந்த இந்த திரைப்படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. இதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகின. முதல் பாடலான பலபலக்குற பகலா நீ, விழி மூடி யோசித்தால் ஆகிய பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் கேட்டன. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் , கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க |சூர்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ராஜமௌலி!
அன்றைய காலக்கட்டத்தில் இந்தப் படம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. 2009ம் ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் வேட்டையைப் பெற்ற படம், தமிழ்நாட்டில் மட்டும் 200 நாட்கள் ஓடிய திரைப்படம் என பல சாதனைகளை அயன் பெற்றது. குறிப்பாக, இந்தப் படம் மலேசியாவில் சக்கைப்போடு போட்டது. அயன் திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் அதிக லாபத்தைப் பெற்றுத்தந்தது. படம் ஆரம்பித்த தருணத்தில் இருந்து முடியும் வரை துளியும் போரடிக்காமல் இதன் கதை வடிவமைப்பு இருந்ததே அயன் படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சூர்யாவின் பல படங்கள் பலருக்குப் பிடித்திருந்தாலும் அயன் படத்தில் எள்ளலும், துள்ளலுமாக வந்த சூர்யாவை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறக்க முடியாதபடி அதன் வடிவமைப்பு இருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் 13ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி பலர் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் #13YearsofAyan என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் அயன் படத்தை பற்றி பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | அதிர்ச்சி தகவல்! சூர்யாவின் இந்த படமும் ஓடிடி ரிலீஸ்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR