2023-ல் மக்களின் மனம் கவர்ந்த ரீல் ஜோடிகள்! உங்களுக்கு பிடித்தது யார்?

இந்த ஆண்டு பல ஹிட் படங்கள் வெளியாகின. இந்த படங்களில் பல ரீல் காதல் ஜோடிகளும் மக்களின் மனங்களை கவர்ந்தனர்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 17, 2023, 03:49 PM IST
  • 2023ஆம் ஆண்டில் பல படங்கள் வெளிவந்தன.
  • இதில் இடம் பெற்ற சில ஜோடிகள் மக்களை கவர்ந்தனர்.
  • அந்த ரீல் ஜோடிகளின் லிஸ்ட் இதோ!
2023-ல் மக்களின் மனம் கவர்ந்த ரீல் ஜோடிகள்! உங்களுக்கு பிடித்தது யார்?  title=

2023ஆம் ஆண்டில், மக்களின் மனம் கவரும் வகையில் பல ஹிட் படங்கள் வெளியாகின. தமிழ் மட்டுமன்றி, தென்னிந்திய மொழிகளில் பல நல்ல படங்கள் வெளியாகின. இந்த படங்களில் இடம் பெற்றிருந்த ஜோடிகள் பலர் மக்களை ஈர்த்தனர். அந்த ஜோடிகள் யார் யார்? 

விஜய்-த்ரிஷா:லியோ

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம், லியோ. இந்த படத்தில் விஜய்க்கு மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். விஜய்-த்ரிஷா ஜோடி மக்களின் மனங்களில் இடம் பிடித்த ஜோடிகளுள் ஒன்று. கில்லி படத்தில் ஆரம்பித்த இவர்களின் கெமிஸ்ட்ரி, சுமார் 19 வருடங்கள் கடந்தும் அப்படியே புதிது போல உள்ளது. இவர்கள் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனார். 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்த இவர்களை மக்கள் நன்றாக ரசித்தனர். 

நானி-மிருணாள் தாகூர்-ஹை நன்னா:

தெலுங்கு, காதல்-காமெடி படங்களுக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில், ரசிகர்களை நன்றாக தன் பக்கம் ஈர்த்த படம், ஹை நன்னா. இதில், மிருணாள் தாகூர்-நானி ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் இன்றளவும் நன்றாக திரையரங்கில் ஓடி வருகிறது. இவர்களும், ரசிகர்களின் ஃபேவரட் ஜோடிகளின் லிஸ்டில் உள்ளனர். 

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து விலகும் கமல்? இனி இவருக்கு பதில் ‘அந்த’ நடிகர்தான் தொகுப்பாளர்!

நவின் பாலிஷெட்டி-அனுஷ்கா ஷெட்டி:மிஸ் மிஸ்டர் பாலிஷெட்டி:

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்காவை மீண்டும் பெரிய திரையில் பார்க்க வைத்த படம்,மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி. காதல்-காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

விஜய் தேவரகொண்டா-சமந்தா:

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்று, குஷி. இந்த படத்தில், விஜய் தேவரகொண்டா-சமந்தா ஆகியோர் இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்த படம், குஷி. இதனை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார். காதலையும், காதல் திருமணம் செய்த பின்பு வரும் பிரச்சனைகளையும் இப்படம் நன்றாக காண்பித்திருந்தது. காட்சிக்கு காட்சி முத்தம், ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி, என அனைத்தையும் மக்கள் நன்றாகவே ரசித்தனர். இந்த ஆண்டு மக்களை கவர்ந்த ஜோடிகளுள் இவர்களும் இருக்கின்றனர். 

பொன்னியின் செல்வன் 2:

மணிரத்னம் இயக்கத்தில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. இதில் ஜெயம் ரவி-ஷோபிதா துலிபலா, த்ரிஷா-ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்-விக்ரம் என பல ஜோடிகள் இருந்தனர். இந்த படத்தில் வந்த புராணமும், சண்டையும் ரசிகர்களை நன்றாக கவர்ந்தது. இந்த ஜோடிகள், ரசிகர்களின் மனங்களில் இடம் பெற்றிருக்கிறது. 

இறுகப்பற்று:

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம், இறுகப்பற்று. இந்த படத்தில், திருமணமான மூன்று தம்பதிகளையும் அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளையும் அலசி ஆராயும் படமாக இருந்தது, இப்படம். இதில், விக்ரம் பிரபு-ஷ்ரத்தா ஆகியோரின் ஜோடி மக்களுக்கு பிடித்திருந்தது. 

மேலும் படிக்க | பிக்பாஸை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம்! அடேங்கப்பா..இத்தனை கோடியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News