‘8 தோட்டாக்கள்’ குழுவினரின் அடுத்தப் படைப்பு ரெடி!

‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் குழுவினர் தற்போது மீண்டும் ஜீவி என்னும் படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர்!

Last Updated : Jun 12, 2018, 02:55 PM IST
‘8 தோட்டாக்கள்’ குழுவினரின் அடுத்தப் படைப்பு ரெடி! title=

‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் குழுவினர் தற்போது மீண்டும் ஜீவி என்னும் படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர்!

கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இப்படக்குழுவினர் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘ஜீவி’.

இத்திரைப்படத்தில் "8 தோட்டாக்கள்" படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கின்றார். அஸ்வினி, மோனிகா ஆகிய இருவரும் முதன்மை காதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு பாபு கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். 

திரைப்டம் குறித்து இயக்குனர் தெரிவிக்கையில்.. ‘விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுது. இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக பானியில் உருவாகி வருகிறது’  என தெரிவித்துள்ளார்.

சுந்திர மூர்த்தி இசையமைக்கும் இப்படத்திற்கு இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் இப்படத்தை லைன் பிரொட்யூஸ் செய்கிறார்.

Trending News