ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்தது ‘இந்த’ முன்னணி ஹீரோதான்! அவர் யார் தெரியுமா?

Jeans Movie First Choice Actor Before Prasanth : ஷங்கர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான ‘ஜீன்ஸ்’ படத்தில், நடிகர் பிரசாந்திற்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 7, 2024, 08:09 PM IST
  • ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்
  • பிரசாந்திற்கு பதில் இவரா..
  • இந்த முன்னணி நடிகரே நடித்திருக்கலாமே!
ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்தது ‘இந்த’ முன்னணி ஹீரோதான்! அவர் யார் தெரியுமா? title=

Jeans Movie First Choice Actor Before Prasanth : தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர், இயக்குநர் ஷங்கர். படம் எடுப்பதிலும், அதன் எடிட்டிங்கிலும் கூட புதுமையை புகுத்திய இவர், தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக இருக்கிறார். இவரது திறமை மிகு பிரம்மாண்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய படங்களுள் ஒன்று, ‘ஜீன்ஸ்’. இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். 

ஜீன்ஸ் திரைப்படம்:

ஜீன்ஸ் திரைப்படம், 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி வெளியானது. அப்போது முன்னணி ஹீரோவாக இருந்த பிரசாந்த், இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவர் மட்டுமன்றி, அவருக்கு தந்தையாக நடித்திருந்த நாசரும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம், பெரிய வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது, படத்தின் திரைக்கதை என்றாலும் அதை தவிர்த்து ஷங்கர் திரையில் செய்திருந்த மேஜிக்தான். “பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்” பாடலை படம் பிடிக்க, உலகின் 7 அதிசயங்களுக்கும் சென்று படமாக்கினார். இப்படி, அப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒவ்வொரு டெக்னாலஜி, ஒவ்வொரு அதிசயம் இருந்தது. இதில் பிரசாந்திற்கு ஜோடியாக அன்றைய உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். 

முதலில் நடிக்க இருந்தவர்:

ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாந்தை நடிக்க அழைப்பதற்கு முன்னர் அழைப்பு போனது யாருக்கு தெரியுமா? நடிகர் அஜித்திற்குதான். அப்போது அஜித்தும் விஜய்யும் “வளரும் நடிகர்கள்” என்ற கட்டத்தை தாண்டி, “போட்ட நடிகர்கள்” என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இதையடுத்து அஜித்தை ஜீன்ஸ் படத்தில் நடிக்க வைக்க எண்ணினார், ஷங்கர். ஜீன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நாட்கள் அதிகம் என்பதாலும் கால்ஷீட் பற்றாக்குறை காரணத்தாலும் அஜித்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அஜித்தை அப்ரோச் செய்வதற்கு முன்னர் ஷங்கரின் முதல் சாய்ஸாக இருந்த ஹீரோ யார் தெரியுமா? நடிகர் அபாஸ். ஆனால் இவரும் 1 வருடத்திற்கு தான் நடிக்க வேண்டிய படங்கள் நிறைய இருப்பதாக கூறி, அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அடுத்து பிரசாந்திடம் வாய்ப்பு சென்றது. அவர் கைவசம் 7 படங்கள் இருந்தாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு ஜீன்ஸ் படத்தில் நடித்தார். படமும் சூப்பர் ஹிட் ஆனது. 

மேலும் படிக்க | ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Ajith Kumar

ஐஸ்வர்யா ராயிற்கு ஜோடியாக நடித்திருப்பார்..

ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடித்திருந்தால் அப்போதே ஐஸ்வர்யா ராய்க்கு ஜாேடியாக நடித்திருப்பார், அஜித்குமார். ஆனால், அதன் பிறகு 2000ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்து விட்டார். 

அஜித்துடன் நடிக்கவே இல்லை..

ஜீன்ஸ் படத்திற்காக அஜித்தை தேர்வு செய்ததோடு சரி, அதன் பிறகு அஜித்தும் ஷங்கரும் ஒரு படத்திலும் இணைந்து பணிபுரியவில்லை. நடிகர் விஜய்யுடன் அவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையிலேயே இணைந்து பணிபுரிய நினைத்த ஷங்கர், 2012ஆம் ஆண்டு வெளியான ‘நண்பன்’ படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த படமும் பெரிய ஹிட் அடித்தது. 

வேறு படத்தில் நடிக்க இருந்த ஐஸ்வர்யா ராய்..

ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திலேயே நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சி செய்தார் ஷங்கர். அது முடியாமல் போனதால் அவரை ஜீன்ஸ் படத்தில் நடிக்க வைத்தார். 

மேலும் படிக்க | CWC 5: குக் வித் கோமாளியில் ‘இந்த’ 7 பேர் கன்ஃபார்ம்! லிஸ்டை பாருங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News