‘சூப்பர் ஒயிட்’! - இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகர் அஜித் தனது 61ஆவது படத்தில் பிசியாக நடித்துவரும் நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2022, 03:44 PM IST
  • அஜித்தின் 61ஆவது படத்தை ஹெச். வினோத் இயக்கிவருகிறார்.
  • அஜித்- வினோத்- போனிகபூர் கூட்டணி 3ஆவது முறையாக இணைந்து படம்.
  • அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
‘சூப்பர் ஒயிட்’! - இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! title=

நடிகர் அஜித் தற்போது இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். அஜித்தின் 61 ஆவது படமான இதை போனி கபூர் தயாரித்துவருகிறார். 

வங்கிக்கொள்ளை மையமாக வைத்து உருவாகிவருவதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் கல்லூரிப் பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளாராம். ஷூட்டிங் பணிகளை வேகமாக நடத்திமுடித்து விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வருகிற தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

                            

மேலும் படிக்க | ராம் சரணுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? - விஜய் படம் கைவிடப்படுகிறதா?!

இந்நிலையில் நடிகர் அஜித் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

                                

அதில் வெள்ளை நிறச் சட்டை, வெள்ளைத் தாடியுடன் அஜித் காட்சியளிக்கிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. அஜித் 61 படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார்.

                                      

அஜித்- ஹெச்.வினோத்- போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நிரவ் ஷா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க | அப்டேட் கேட்ட ரசிகர்கள்- சர்ப்ரைஸ் ட்ரீட் வைத்த ‘சலார்’ படக்குழு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News