அருண் விஜய் - அறிவழகன் காம்போ 'பார்டர்' படம் ஓடிடியில் வெளியாகிறதா?

நடிகர் அருண் விஜய் (Actor Arun Vijay) நடிப்பில் உருவாகியுள்ள "பார்டர்" படத்தை ஓடிடியில் (OTT) வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகாவும், அதுகுறித்து பேச்சு வாரத்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 5, 2021, 05:17 PM IST
அருண் விஜய் - அறிவழகன் காம்போ 'பார்டர்' படம் ஓடிடியில் வெளியாகிறதா?

Tamil Cinema News: நடிகர் அருண் விஜய் (Actor Arun Vijay) நடிப்பில் உருவாகியுள்ள "பார்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரீலிஸ்க்கு தயாராக உள்ளது. ஆனால் கொரோனா தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ள நிலையில், மேலும் காத்திருப்பதற்கு பதிலாக படத்தை ஓடிடியில் (OTT) வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகாவும், அதுகுறித்து பேச்சு வாரத்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் விரைவில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

ஓடிடியில் "பார்டர்" எப்பொழுது வெளியிடப்படும்?
"பார்டர்" (Borrder) படத்தின் OTT வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தயாரிப்பாளர்கள் OTT தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் விரைவில் கூடுதல் விவரங்களை வெளியிடுவார்கள் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ |  25 வருட திரைப்பயணத்தை கொண்டாடிய அருண் விஜய்

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு எல்லா விவரங்களையும் இங்கே புதுப்பிப்போம். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என்பதில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

பார்டர் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விவரம்:
இப்படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு கதாநாயகியாக ரெஜினா (Regina Cassandra)நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். 

இந்த படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் & விஜய ராகவேந்திரர் ராஜசேகர் தயாரித்துள்ளனர். எடிட்டிங் சாபு ஜோசப் மற்றும் இசை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபு திலக் கைப்பற்றியுள்ளார்.

க்ரைம் த்ரில்லர் படமான "குற்றம் 23" படத்துக்குப் பின் நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் அறிவழகன் (Director Arivazhagan) காம்போவில் மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ள இரண்டாவது படம் தான் "பார்டர்". இந்த படம் அவர்களின் முந்தைய படத்திலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். 

ALSO READ |  SeePic: படுகவர்ச்சியாக போடோக்கு போஸ் கொடுத்த சிம்பு ஹீரோயின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News