ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் டீசர் :Watch

நடிகை ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2018, 06:15 PM IST
ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் டீசர் :Watch title=

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘துமாரி சுலு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தின் டீசர் நடிகர் சூர்யா இன்று வெளியிட்டார். இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விதார்த், லட்சுமி மஞ்சு, குமாரவேல், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, மோகன் ராமன், உமா பத்மநாபன், சிந்துசுஷேரன், சீமா டேன்ஜா, மாஸ்டர் தேஜாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

படத்திற்கு இசை ஏ.எச். காஷிப் அமைத்துள்ளார். பாடல்கள் மதன்கார்கி, கதை சுரேஷ் திரிவேணி, இயக்கம் ராதாமோகன். தயாரிப்பு தனஞ்செயன். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ‘காற்றின் மொழி’ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News