முடிவை மாற்றிய உதயநிதி - உற்சாகத்தில் உடன் பிறப்புகள்

தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக தமிழ் சினிமாவில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஒருக்கட்டத்தில் ஹீரோவானார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 5, 2022, 04:10 PM IST
  • மனதை மாற்றிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்
  • நடிப்பை தொடர்வதற்கு உதய் முடிவு
  • நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தி வெற்றி விழாவில் பேச்சு
முடிவை மாற்றிய உதயநிதி - உற்சாகத்தில் உடன் பிறப்புகள் title=

தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக தமிழ் சினிமாவில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஒருக்கட்டத்தில் ஹீரோவானார். அவரது படங்கள் வெளியாகும்போதெல்லாம் திமுகவினர் விழா போல் கொண்டாடுவர். இந்தச் சூழலில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பாக திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதய் எம்.எல்.ஏவாக தேர்வாகி கோட்டைக்குள் நுழைந்தார். 

இதனையடுத்து அவர் அமைச்சராக வேண்டுமென்று தீர்மானங்களும் கட்சியினர் சார்பாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் மாமன்னன் படம்தான் கடைசி என கூறப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!

சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்திலும் உதயநிதி நடித்திருந்தார். திமுக ஆளுங்கட்சியாக வந்த பிறகு வெளியான முதல் உதயநிதி படம் என்பதால் கட்சியினர் அதகளம் செய்தனர்.

படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்தான் என்றாலும் தமிழுக்கு தகுந்தவாறு உருவாக்கப்பட்டிருந்தது நெஞ்சுக்கு நீதி.

 

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் உதயநிதி, இயக்குநர் அருண்ராஜா காமரா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்திற்கு கிடைத்த பெருமை!

அப்போது பேசிய உதயநிதி, “நான் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்யவில்லை. நல்ல கதை எனக்கு கிடைத்தால் நான் தொடந்து நடிப்பேன். என்னால் அரசியலையும், சினிமாவையும் சமாளித்துக்கொள்ள முடியும் என்றார். இதனைக் கேட்ட உடன்பிறப்புகள், உதயநிதியை தொடர்ந்து திரையில் பார்க்கலாம் என உற்சாகத்தில் இருக்கின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News