Actor Vijay Unknown Facts: பொதுவாகவே, 90கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் பிறந்தவர்களில் பெரும்பாலனோருக்கு விஜய் அல்லது அஜித்தான் பிடித்த ஹீரோக்களாக இருப்பார்கள். காரணம், இவர்களின் படங்களை பார்த்துதான் அவர்கள் வளரவே செய்திருப்பார்கள். நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய், தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், இங்கு பார்ப்போம்.
விஜய்க்கு 50 வயசாயிடுச்சா?
20 வருடங்களுக்கு முன்பு வரை, கல்லூரியில் படிக்கும் மாணவனாக நடித்து வந்தவர், விஜய். அப்போதே அவர் தனது 30களில் இருந்தார் என்பது இப்போதுதான் தெரிகிறது. தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் திரையுலகிற்கு வந்திருந்தாலும், தற்போது தென்னிந்திய திரையுலகிலேயே தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர். இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருப்பதற்கு காரணம், நடிப்புத்திறமை மட்டுமல்ல, பலருக்கு உதவும் நல்ல குணமும்தான் என்று இவரது ரசிகர்களால் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட, இளமையுடனும் துள்ளளுடனும் இருந்த விஜய்யை பார்க்க முடிந்தது. இந்த நிலையில், இவருக்கு 50 வயதாகி விட்டது என்பதை பலரால் நம்பவே முடியவில்லை.
மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..
விஜய் குறித்த சுவாரஸ்யமான 50 விஷயங்கள்..
உண்மை பெயர்..மறைந்த தங்கை..குடும்ப பின்னணி..
- விஜய்யின் உண்மையான பெயர், ஜோசப் விஜய் சந்திரசேகர்.
- விஜய் 1984 முதல் 1998 வரை, தனது தந்தை இயக்கிய 5 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்
- விஜய் ஹீரோவாக நடித்த போது அவருக்கு வயது 18.
- ரஜினிகாந்துடன் நான் சிவப்பு மனிதன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
- விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் கூட்டம் உண்டு.
- கலைத் துறையில் தமிழகத்தின் உயரிய விருதான கலைமாமணி விருதைப் பெற்றவர்.
- 7 படங்களில் ஹீரோவாக நடித்த போதிலும் கலைமாமணி விருது பெற்ற நடிகர் இவர்.
- விஜய்க்கு வித்யா சந்திரசேகரன் என்ற தங்கை இருந்தார். இவர், 2 வயதாக இருந்த போது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- விஜய், தனது தங்கை இறந்தவுடன் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அதிலிருந்துதான் மிகவும் அமைதியான மனிதராக மாறியதாகவும் அவரது தாய் சோபனா ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.
- தனது மறைந்த தங்கை மீது மிகவும் பாசம் கொண்ட விஜய், விவி ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இது, விஜய்-வித்யா என்பதை குறிக்கிறது.
- 2009ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற இவரது ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தனது ரசிகர்களை நற்பணிகள் செய்யுமாறு அறிவுருத்தினார் விஜய்.
- விஜய், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்று பலர் நடித்திருக்கின்றனர். ஆனால், அவர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிக்கேஷன் பட்டம் பெற்றிருக்கிறார்.
- 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜய் மக்கள் இயக்கம் அதிமுக கட்சியை ஆதரித்ததாக கூறப்படுகிறது.
- விஜய், தனது பெற்றோர்களால் பார்த்து வைக்கப்பட்ட சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
- விஜய், போக்கிரி படத்தின் இந்தி ரீ-மேக்கான ரவுடி ராத்தோர் படத்தின் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்திருக்கிறார்.
- விஜய் ஒரு முறை அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது டாம் க்ருஸின் அழகிய இல்லத்தை பார்த்தார். இதைப்பார்த்து வியந்து போன இவர், அதை போட்டோ எடுத்து தனது வீட்டையும் அதே போல கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
- இதுவரை இவர் நடித்த படங்களில், 13 படத்தில் இவருக்கு விஜய் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
- ஆசியாவின் ஈஸ்டர்ன் ஐ 2023ஆம் ஆண்டிற்கான டாப் பிரபலங்களின் பட்டியலில்விஜய் இடம் பெற்றிருக்கிறார் இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களை தாண்டி இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் இவர்தான்.
- விஜய் நடிப்பில் பிரியமானவளே படம் வெளியானது. இதில் அவர் குழந்தைக்காக ‘ஜூன் ஜூலை மாதத்தில்’ பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த படப்பிடிப்பின் போது, அவரது மனைவி சங்கீதா உண்மையாகவே கர்ப்பமாக இருந்தார். அதனால், இந்த பாடலில் விஜய் மிகுந்த ஆனந்தத்துடன் நடித்ததாக கூறப்படுகிறது.
- விஜய்யின் 50வது படம் சுறா. இது, அவருக்கு தோல்வி படமாக அமைந்திருந்தது.
- விஜய்க்கு 2010-2012 ஆம் ஆண்டு வரை வெளியான விஜய் படங்களில், பெரும்பாலானவை நல்ல வெற்றியை பெற்றன.
- விஜய், முன்பு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டார். பின்பு அவருக்கு வயதானவுடன் ‘இளைய’ எனும் டைட்டில் மறைந்து போனது.
- நடிகர் விஜய் நடிப்பு மட்டுமல்ல, திறமையாக பாடலும் பாடுபவர். இதுவரை தான் நடித்த படங்களில் 35ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்
- தமிழ் திரையுலகில் வேகமாகவும், சூப்பராகவும் நடனமாடத்தெறிந்த நடிகர்களுள் முதன்மையானவர் விஜய். இவர் வேகத்திற்கு எந்த நடிகையாலும் ஈடுகொடுத்து ஆட முடியாதாம்.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகரான விஜய், அவரது படங்கள் அனைத்தையும் பார்த்து விடுவாராம்.
- அண்ணாமலை படத்தை மட்டும் 30 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறாராம்.
- தமிழ் திரையுலகில் இருக்கும் 20ற்கும் மேற்பட்ட இயக்குநர்கள் விஜய்யால்தான் திரையுலகிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
- விஜய், நடிப்புத்துறையில் 2007ஆம் ஆண்டு முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
- விஜய் இதுவரை கோட் படத்துடன் சேர்த்து 68 படங்களில் நடித்திருக்கிறார்.
- விஜய் கேமியாே ரோலில் இதுவரை 2 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
- விஜய்யின் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், பாக்ஸ் ஆபிஸில் எப்படியேனும் ஹிட் அடித்து விடும்.
- விஜய்க்கு இந்தியாவை தாண்டி, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர்.
- விஜய் ஒரே மாதிரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்காதவர். ஒரு படம் ஆக்ஷன் படமாக இருந்தால், இன்னொரு படம் காமெடி-காதல் படமாக இருக்கும். சமீப காலமாகத்தான் அவர் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை.
- விஜய் இதுவரை அதிகம் கோக்கோர்த்து நடித்த இயக்குநர், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரகேர்தான். விஜய்யின் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் அவர் 11க்கும் மேற்பட்ட படங்களில் அவருடன் கைக்கோர்த்திருக்கிறார்.
- தனது தந்தைக்கு பிறகு விஜய் மூன்று முறை கைக்கோர்த்த இயக்குநர், அட்லீ. அதன் பிறகு 2 முறை லாேகேஷ் கனகராஜ் உடன் இணைந்திருக்கிறார்.
- விஜய் முதல் மற்றும் கடைசி முறையாக 3 வேடங்களில் நடித்த படம், மெர்சல்.
- விஜய்யின் வீட்டில் 2020ஆம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
- இவரது படங்கள் வெளியாகும் சமயங்களில் அதன் பாடல்கள் குறித்தும், போஸ்டர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுவதுண்டு.
- விஜய்யின் வெளிநாட்டு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு, எந்த வரியும் செலுத்த வேண்டாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
- நடிகர் விஜய் தன் வீட்டில் கோல்டன் ரிட்ரீவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
- தனது தாய்க்காக சோலிங்கநல்லூரில் நடிகர் விஜய் ஒரு சாய் பாபா கோயிலை கட்டிக்கொடுத்து இருக்கிறார்.
- விஜய், கோட் படத்தில் 2 பாடல்களை பாடியிருக்கிறார். இதற்கு முன்னர் எந்த படங்களில் ஒரு பாடலுக்கு மேல் பாடியதாக தெரியவில்லை.
- சினிமாவிற்கு வந்து அரசியல் கட்சி தொடங்கியவர்களுள் விஜய்யும் ஒருவர்.
- உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே முழு நேர அரசியலில் ஈடுபட, திரையுலகை விட்டு விலகும் நடிகரும் இவரே.
- பேரிடர் எங்கு நடந்தாலும் அங்கு சென்று நிவாரண உதவிகளை வழங்குவார்.
- சாதுவான நடிகர் விஜய், வில்லு படத்தின் பத்திரிக்கையளார்கள் சந்திப்பில் கோபமடைந்தது பேசு பொருளாக மாறியது.
- விஜய், எப்போதும் அமைதியாக இருப்பாராம். ஆனால் சிரிக்க ஆரம்பித்தால் ஃபிரண்ட்ஸ் படத்தில் வருவது போல சிரித்துக்கொண்டே இருப்பாராம்.
- தனது பெற்றோரிடம் ஓராண்டான நடிகர் விஜய் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது தாய் தந்தையை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆண்டு அரசியல் கட்சியை அறிவித்த விஜய், போட்டியிட்டால் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் என விடாப்பிடியாக இருக்கிறார்.
- விஜய், கடந்த ஆண்டில் இன்ஸ்டாகிராம் கணக்கை தாெடங்கினார். அதி வேகமாக 10 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்ற நடிகர்களுள் ஒருவர் இவர்.
மேலும் படிக்க | Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ