கொரோனா பரவல் காரணமாக Thalapathy 65 படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக ‘தளபதி 65’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2021, 06:28 PM IST
கொரோனா பரவல் காரணமாக Thalapathy 65 படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு title=

தளபதி 65 அப்டேட்ஸ்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 65. விஜய்க்கு (Actor Vijay) ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் (Thalapathy 65) முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் (Vijay) தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கையேடு அன்று இரவே விமானத்தில் ஜார்ஜியா பறந்தார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜிவாவில் நடந்த நிலையில், படக்குழுவினர் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திரும்பினர்.

ALSO READ | Thalapathy 65: விஜய்யின் வரவிருக்கும் திரைப்படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை மே மாதம் சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் (Coronavirus) பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. இதற்கிடையில் இந்த படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விஜய் நடிக்கும் 'தளபதி 65' திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்திக் கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News