“மூடிக்கிட்டு இருக்கனும்” சிவகார்த்திகேயன்-டி.இமான் சர்ச்சை-சூடாக பேசிய பிரபலம்!

டி.இமான்-சிவகார்த்திகேயனின் விவகாரம் தலைத்தூக்கியுள்ள நிலையில், இது குறித்து ஒரு பிரபலம் சூடாக பேசியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 24, 2023, 06:55 PM IST
  • டி.இமான்-சிவகார்த்திகேயனின் விவகாரம் தலைத்துக்கியுள்ளது.
  • இமானின் விவாகரத்திற்கு சிவாதான் காரணம் என கூறப்படுகிறது.
  • இது குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
“மூடிக்கிட்டு இருக்கனும்” சிவகார்த்திகேயன்-டி.இமான் சர்ச்சை-சூடாக பேசிய பிரபலம்! title=

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான், தனக்கு சிவகார்த்திகேயன் பெரிய துரோகத்தை செய்து விட்டதாக கூறியிருந்த விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

டி.இமான்-சிவகார்த்திகேயன் விவகாரம்:

தமிழ் திரையுலகில், பல படங்களில் ஒன்றாக வேலைப்பார்த்த கலைஞர்களாகவும் நண்பர்களாகவும் இருந்தவர்கள், டி.இமான் மற்றும் சிவகார்த்திகேயன். மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட சிவகார்த்திகேயனின் படங்களுக்கு டி.இமான் இசையமைத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் சமீப காலமாக எந்த படங்களிலும் இணைந்து பணிபுரிவதில்லை. இதற்கான காரணம் குறித்த இமானிடமே ஒரு நேர்காணலில் கேட்க்கப்பட்டது. 

தனக்கு சிவகார்த்திகேயன் பெரிய துரோகத்தை செய்து விட்டதாகவும், அது என்ன என்பதை வெளியில் கூற முடியாது என்றும் இமான் ஒரு நேர்காணலில் குறிபிட்டார். இந்த நேர்காணல் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர் இதற்கான காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்தனர். 

இமானின் விவாகரத்திற்கு சிவாதான் காரணமா? 

இமானும் சிவகார்த்திகேயனும் நண்பர்களாக இருந்த போது, இருவரும் குடும்பத்தினருடன் அடிக்கடி சந்தித்துக்கொள்வர். இந்த நிலையில்தான், இமானிற்கு 2021ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. இவருக்கு இந்த திருமணம் மூலம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதையடுத்து, இமான் கடந்த 2022ஆம் ஆண்டு அமீலியா என்பவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இமானின் நேர்காணலை பார்த்த ரசிகர்கள், சிவகார்த்திகேயன்தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என்ற முடிவிற்கே வந்து விட்டனர். இது குறித்து சிவகார்த்திகேயன் எந்த பொதுவெளியிலும் இதுவரை பேசவில்லை. 

Deepakdinakar

மேலும் படிக்க | “பொய் ரொம்ப நாளைக்கு நிலைக்காது..” சிவகார்த்திகேயன் பேட்டி!

பேட்டி கொடுத்த பிரபலம்..

தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமாக இருப்பர், தீபக். இவரும் சிவகார்த்திகேயனும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்துள்ளனர். அதைத்தாண்டி இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தீபக், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிம் சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இன்றைய உலகில், சமூக வலைதளங்ளில் ஒரு சின்ன விஷயத்தை கூட வியூஸ்காக பெரிய விஷயமாக மாற்றி விடுகின்றனர். அது என்ன செய்தி என்று பார்த்தால், அது குப்பையான செய்தியாக இருக்கும். இதைப்பார்த்து ஒரு 10 பேர் அதே போல செய்கின்றனர். சிலர், அது என்ன என்று கூட படிக்காமல் மேலோட்டமாக படித்துவிட்டு அப்படியே நம்பி விடுகிறார்கள். அதனால், ஒரு விஷயம் குறித்த உண்மை தெரியவில்லை என்றால் அதைப்பற்றி பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்...” என்று கூலாகவும் அதே சமயத்தில் காட்டமாகவும் பேசியுள்ளார்.

சர்ச்சை குறித்து பேசிய இமானின் முன்னாள் மனைவி..

சிவகார்த்திகேயனின் இந்த விவகாரம் பெரிதாக எழுந்த போது, டி.இமானின் முன்னாள் மனைவி ஒரு ஊடக சேனலுக்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டி கொடுத்தார். அதில் சிவகார்த்திகேயன் தனக்கும் இமானிற்கும் சமாதானம் பேச முயற்சி செய்ததாகவும் அவர் ஒரு ஜெண்டில் மேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | அர்ஜூனின் மகளுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்! ‘இந்த’ நடிகரின் மகன்தான் மாப்பிள்ளை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News