மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் சம்பவம். இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்கின்றனர். இதன் முக்கிய கதாபாத்திரத்தில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார்.இவர் ஏற்கனவே அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதாவும் நடிக்கிறார். இவர்களோடு, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சம்பவம் திரைப்படத்த்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார். இவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் இணைஇயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். சந்திரகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.
உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு என கூறப்படுகிறது.
இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுமென்று படக்குழு சார்பாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 'குக் வித் கோமாளி 3' டைட்டில் வின்னருக்கு கிடைத்த பரிசு தொகை இவ்வளவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ