Kushboo:“நொண்டி சாக்கு கூறுகிறது தமிழக அரசு”தி கேரளா ஸ்டோரி தடை குறித்து குஷ்பூ காட்டம்!

நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ, கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை குறித்த தனது கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : May 8, 2023, 11:55 AM IST
  • தி கேரளா ஸ்டோரி பட காட்சிகளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.
  • படத்திற்கு தடை விதித்தது குறித்து அரசு நொண்டி சாக்குகளை கூறுவதாக குஷ்பூ காட்டம்.
  • கேரளா ஸ்டோரி படம் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த உண்மைகளை வெளிகொண்டு வந்திருப்பதாக குஷ்பூ ட்வீட்
Kushboo:“நொண்டி சாக்கு கூறுகிறது தமிழக அரசு”தி கேரளா ஸ்டோரி தடை குறித்து குஷ்பூ காட்டம்! title=

பா.ஜ.க கட்சியின் முக்கிய உறுபினர்களுள் ஒருவர் குஷ்பூ. 80’ஸ்களில் திரையுலகில் பிரவேசித்து பலருக்கு கனவுக்கன்னியாக இருந்த இவர், திரை வாழ்க்கைக்கு பிறகு அரசியில் பிசியாக வலம் வருகிறார். இவர், தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். சமீப காலங்களில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், இப்போது முழு நேரமும் அரசியில் பணிகளில் ஈடுபாடு காட்டி வருகிறார். 

கேரளா ஸ்டோரிக்கு தடை:

சுதீப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தின் கதை, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை எதிர்ப்பது போல் உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்தனர். இதனாலேயே, இப்படம் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும் என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். கடந்த 5ஆம் தேதி வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இப்படத்தின் திரையரங்க காட்சிகள் தமிழ் நாட்டில் ரத்து செய்யப்பட்டன. 

மேலும் படிக்க | கதாநாயகனாக நடிக்கப்போகும் விஜய் டிவி ரக்ஷன்! ஹீரோயின் இவங்களா?

 

“ஏன் பயப்படுகிறீர்கள்?”

பா.ஜ.க.வின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவரான நடிகை குஷ்பூ, கேரளா ஸ்டோரி குறித்த தனது கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய போராடுபவர்கள், ஏன் அப்படத்தை பார்த்து இப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும், இப்படம் அப்பட்டமாக சொல்லப்பட்ட உண்மை எனவும் பல ஆண்டுகளாக அமைதியாக நடைப்பெற்ற பலரது போராட்டத்தைதான் இப்பபடத்தில் கூறியுள்ளதாகவும் குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

“நொண்டி சாக்கு சொல்லும் அரசு”

குஷ்பூ, தனது ட்விட்டில் தொடர்ந்து கூறியுள்ளதாவது, “எதைப்பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். மற்றவர்களுக்காக நீங்கள் முடிவு செய்ய கூடாது. தமிழக அரசாங்கம் இப்படத்திற்கு தடை விதித்ததற்கு நொண்டி சாக்குகளை கூறுகிறது” என்று கூறியுள்ளார். மேலும்,  இவ்வாறான எதிர்ப்புகள்தான், தி கேரளா ஸ்டோரி கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் அதை உணர்த்தியதற்கு நன்றி என அவர் கூறியுள்ளார். 

திருமணம்-மதமாற்றம்:ஓபனாக பேசிய குஷ்பூ

பிறப்பால் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குஷ்பூ, சுந்தர்.சியை திருமணம் செய்து கொள்வதற்காக மதமாற்றம் செய்துகொண்டதாக பலர் கூறிவந்தனர். இந்நிலையில், இது குறித்து நடிகை குஷ்பூ நேற்று ஒரு ட்வீட்டை தனத சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதில், “நான் திருமணத்திற்காக மதம் மாறினேன் என கூறுபவர்கள் கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார். “மதமாற்றம் குறித்து என்னிடம் வந்து கேள்வி கேட்பவர்கள் நம் நாட்டில் உள்ள சிறப்பு திருமணச்சட்டம் குறித்து யாருமே கேள்விப்பட்டதில்லை என்று நினைக்கிறேன்” என்றும் குஷ்பூ கூறியுள்ளார். குஷ்பூவின் தனது ட்வீட்டில் தொடர்ந்து தான் மதம் மாறவில்லை என்றும் யாரும் தன்னை மதம் மாறும்படி கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். “எனது 23 வருட திருமணம் நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது” எனவும் குஷ்பூ கூறியுள்ளார். 

மேலும் படிக்க | நேற்று படத்தின் அப்டேட்... இன்று பையனின் பெயர் அப்டேட் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அட்லீ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

 

Trending News