பாராதி ராஜாவுக்காக பிரான்ஸில் சிறப்பு பிரார்த்தனை செய்த தமிழின் முன்னணி நடிகை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் பாராதி ராஜாவுக்காக பிரான்ஸில் பிரார்த்தனை செய்துள்ளார் நடிகை ராதிகா  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 25, 2022, 06:45 PM IST
  • மருத்துவமனையில் இருக்கும் பாரதி ராஜா
  • அவருக்காக நடிகை ராதிகா சிறப்பு பிரார்த்தனை
பாராதி ராஜாவுக்காக பிரான்ஸில் சிறப்பு பிரார்த்தனை செய்த தமிழின் முன்னணி நடிகை title=

உடல்நலப் பிரச்சனை காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ’இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கவலைப்படும் வகையிலான பிரச்சனை ஏதும் இல்லை எனவும், நான்கு நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. திடீரென பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று இயக்குநர் இமயம் பாரதிராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, சிகிச்சையில் இருக்கும்போது கூட நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறார். நலம் பெற்று பாரதி ராஜா வீடு திரும்புவார் எனத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து நடிகை ராதிகா, மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கும் பாரதிராஜாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். தற்போது பிரான்ஸில் இருக்கும் அவர், அங்கிருக்கும் லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏந்தி இந்த பிரார்த்தனையை மேற்கொண்டார். 

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் நடிகை ராதிகா, "என் இனிய இயக்குநர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய எனது சிறப்பு பிரார்த்தனை. நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். உங்களை விரைவில் காண வேண்டும். ஆரோக்கியமாக இருங்கள். உங்களிடம் பேசுவதை மிஸ் செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். நடிகை ராதிகாவை வெள்ளித் திரைக்கு அழைத்து வந்ததே பாராதி ராஜா தான். அறிமுகப்படுத்திய இயக்குநர் என்பதால், அவர் மீது எப்போது மாறா அன்பும், பாசமும் வைத்திருப்பார் நடிகை ராதிகா. தற்போது அவர் வாசு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் சந்திரமுகி 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் லாரன்ஸ் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மேலும் படிக்க | அவர் அடிச்ச 10 பேருமே டான்தான்...! - பீனிக்ஸ் மனிதர் விஜயகாந்த் பிறந்த நாள்!

மேலும் படிக்க | பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் உருவான தமிழ் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News