Bigg Boss 2! நிகழ்ச்சிக்கு போக மீண்டும் வாய்ப்பு கேட்கும் அனுயா!

வரும் ஜுன் 17ம் தேதி தொடங்க இருக்கும் Bigg Boss 2 நிகழ்ச்சிக்கு மீண்டும் போக வாய்ப்பு கேட்கும் அனுயா!  

Last Updated : Jun 8, 2018, 04:39 PM IST
Bigg Boss 2!  நிகழ்ச்சிக்கு போக மீண்டும் வாய்ப்பு கேட்கும் அனுயா! title=

கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில், ஆரவ், ஓவியா, சினேகன், ஜூலி, காயத்திரி ஆகிய அனைவரும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்கள். 

இதனையடுத்து, இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியின் டீஸரினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அண்மையில் அதன் புரமோவும் வெளியானது.  இதன் டீஸர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.

இதையடுத்து, Bigg Boss 2- வின் முதல் போட்டியாளராக காமடி நடிகர் 'பவர் ஸ்டார்'' தேர்வு செய்யப்பட்டதையடுத்து, பல பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, ஜூன் 17 ல் தேதி, இந்நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்த்தை தொடர்ந்து அதன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில், முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை அனுயா ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டிற்குள் போக எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News