ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய புது மாப்பிள்ளை நடிகர்!

Ashok Selvan New Look: சமீபத்தில் திருமணம் முடித்த நடிகர் அசோக் செல்வன், தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Oct 30, 2023, 05:01 PM IST
  • சமீபத்தில் திருமணம் முடித்த நடிகர், அசோக் செல்வன்.
  • இவர் தனது லுக்கை மொத்தமாக மாற்றியுள்ளார்.
  • இவரது புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய புது மாப்பிள்ளை நடிகர்!  title=

தமிழ் ரசிகைகள் பலருக்கு கனவு கண்ணனாக திகழ்ந்த அசோக் செல்வன், சமீபத்தில் கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார். இவர், தற்போது தனது லுக்கை ஒரே அடியாக மாற்றியுள்ளார். 

அசோக் செல்வன்:

தமிழ் திரையுலகின் இளம் நாயகர்களுள் ஒருவர், அசோக் செல்வன். இவர், தமிழில் சில குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறிய நடிகர். 

அசோக் செல்வன், அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த  'பில்லா 2' படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' படத்தில் அசோக் செல்வன், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இதைத்தொடர்ந்து அசோக் செல்வனுக்கு கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து பல படங்கள் வரிசை காட்டி நின்றது.  பீட்சா-2 வில்லா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார், இதை தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, 144, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.  தமிழில் மட்டுமன்றி  தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்கள் சிலவற்றிலும் அசோக் செல்வன் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. 

கீர்த்தி பாண்டியன்-அசோக் செல்வன் திருமணம்:

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி திருமணம் நடந்தது. இரு வீட்டார் சம்மத்துடன் கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரில் இந்த திருமணம் நடந்தது. இதில், இவர்களின் வெகு சில உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். இந்த திருமணம், எளிய முறையில் நடைப்பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அடையாளம் தெரியாமல் மாறிப்போன அசோக் செல்வன்..

நடிகர் அசோக் செல்வன், தனது திருமணத்தின் போது முடியை நீளமாக வைத்து வேறு ஒரு லுக்கில் இருந்தார். ஆனால் தற்போது, அவர் தனது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். கிராப் போன்று ஹேர் ஸ்டைல் செய்துள்ள அவர், வெள்ளை சட்டை அணிந்தவாறு ரிப்ட் ஜீன்ஸ் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் “என் அழகான கணவன்..” என்று கமெண்ட் அடித்துள்ளார். இவரது இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

அசோக் செல்வனின் அடுத்த படம்..

அசோக் செல்வனும் அவரது மனைவி கீர்த்தி பாண்டியனும் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தில் “உன்தன் கை வீசிடும் பொய் ஜாடை எனை..” என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இவர்களின் திருமண வீடியோவை அந்த பாடலை வைத்து எடிட் செய்து பலர் இன்றளவும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | “இனி படம் இயக்குவதாக இல்லை..” பிரபல இயக்குநரின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News