உலகம் முழுவதும் உள்ள ஆபத்தான காடுகளுக்கு சென்று எப்படி உயிர் வாழ்வது என்று கற்றுக்கொடுத்த சாகசக்காரர், பியர் கிரில்ஸ். எங்காவது மாட்டிக்கொண்டால் எப்படி உயிர் பிழைப்பது என்று கூட, தனது நிகழ்ச்சிகளில் சொல்லிக்கொடுத்திருக்கிறார் இவர். இவ்வளவு ஏன், பல குழந்தைகள் டிஸ்கவரி சேனல் பார்ப்பதற்கு காரணமாக இருந்தவரே இவர்தான். இவரது பிரபல நிகழ்ச்சியான Man Vs. Wild இந்தியாவில் மிகவும் பிரபலமான ஷோக்களில் ஒன்று.
இரண்டு பிரபலங்களுடன் ஷோ நடத்த ஆசை..
பிரபல சாகச வீரரான பியர் கிரில்ஸ், இந்தியாவின் பல பிரபலங்களை வைத்து உருவான, மேன் Vs. வைல்ட் ஷோ மாபெரும் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து அவர், மேலும் இரண்டு இந்திய பிரபலங்களுடன் சாகசம் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பிரபலங்களில் ஒருவர், பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா. இன்னொருவர், இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர்களுடன் மேன் Vs. வைல்ட் நிகழ்ச்சியை நடத்த விருப்பமுள்ளதாக பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள்..
உலகின் மிகப்பெரிய சாகச வீரர் என புகழப்படும் பியர் கிரில்ஸிற்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து இவர் குறித்த தகவல்களும் செய்திகளும் சமூக வலைதளங்களில் வட்டமடித்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, பியர் கிரில்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க.
முன்னாள் ராணுவ வீரர்..
பியர் கிரில்ஸ் சிறு வயது முதலே தற்காப்பு கலைகளை கற்றுத் தேர்ந்தவர். இது மட்டுமின்றி மூன்று வருடம் பிரிட்டிஷ் நாட்டு சிறப்பு படையில் போர்வீரராக பணியாற்றி உள்ளார். 21 SAS படைப்பிரிவின் ஒரு பகுதியாக இருந்ததால் தன்னைத் தானே வலிமைப்படுத்திக் கொண்டார். இவர் பணிபுரிந்து பிரிட்டிஷ் சிறப்பு படையில் தான் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி உயிர் வாழ்வது எனும் வித்தையை கற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஃபீனிக்ஸ் பறவையாக எழுச்சி..!
ஆப்பிரிக்காவில் ஃபிரி ஃபால் பாராசூட்டிங் செய்யும்போது இவருக்கு விபத்து ஏற்பட்டது. விபத்தில் இவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. பிறகு ராணுவ மையத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவத்தால் பியர் கிரில்ஸ் தொடர்ந்து, ராணுவத்தில் பணிபுரியும் வாய்ப்பை இழந்தார். இவரிடம், “நீ்ங்கள் இனி நடக்கவே முடியாது..” என டாக்டர் கூறிவிட்டாராம். ஆனால், விடா முயற்சி எடித்தால் விஸ்வரூப வெற்றி கிடைக்கும் என நம்பிய பியர் கிரில்ஸ் சில வருடங்களிலேயே நடக்க ஆரம்பித்தார். பிறகு உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் மலை மீது ஏறி, மிகச் சிறிய வயதில் எவரெஸ்ட் மலை ஏறிய சாதனையாளர் என்ற பட்டத்தை பெற்றார். எத்தனை இடயூறுகள் வந்தாலும், எல்லாவற்றையும் தூசி போல தட்டிவிட்டு ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்தார் பியர் கிரில்ஸ்.
மேன் Vs. வைல்ட்:
டிஸ்கவரி சேனலில், மேன் வெர்சஸ் வைல்ட் என்ற டிவி தொடரின் ஏழு சீசன்களில் பங்கேற்றார், பியர் கிரில்ஸ். இந்த தொடர்தான் பியர் கிரில்ஸை உலக அளவில் பிரபலமாக்கி உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த ஷோவை, இவருக்காகவே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அமர்ந்து பார்ப்பர். பின்னாளில், இவருக்கென்று தனி ரசிகர் படையே உருவானது. மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் உலகளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடர் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக இந்த தொடரை 1.2 பில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி அவர் உலக அளவில் பல சாகச நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.
ரன்னிங் வைல்டு:
பியர் கிரில்ஸ் சில வருடங்களுக்கு முன்பு ரன்னிங் வைல்டு என்ற தொடரில் பங்கேற்றார். இந்த தொடரில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்காவின் பிரபலமான நடிகர்களான வில் ஃபெடரல் மற்றும் ஜூலி ஃபியோனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து செய்த ஒரு நிகழ்ச்சியும் நிகழ்ச்சி லெவலில் ஹிட் அடித்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ