எக்ஸ்பிரஷனே வரவில்லை - விஜய்யை கலாய்த்த பீஸ்ட் வில்லன்

பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்த சாக்கோ அளித்த பேட்டி ஒன்று விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 19, 2022, 03:42 PM IST
  • பீஸ்ட் படத்தை விமர்சித்த வில்லன்
  • விஜய்யை விமர்சித்த நடிகர் சாக்கோ
எக்ஸ்பிரஷனே வரவில்லை - விஜய்யை கலாய்த்த பீஸ்ட் வில்லன் title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. அனிருத் இசை மட்டுமே படத்தில் தேறியதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

அதுமட்டுமின்றி விஜய் என்ற பெரிய ஹீரோவை வைத்துக்கொண்டு திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் நெல்சன் கோட்டைவிட்டுவிட்டார் எனவும் கூறினர். 

இப்படிப்பட்ட சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது. அந்தச் சமயத்தில் நெல்சனையே விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

Nelson

ரஜினி படத்தினை இயக்கும் வாய்ப்பு பறிபோகும் அளவு பீஸ்ட் படத்துகான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்தார் நெல்சன் திலீப்குமார். ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது இயல்புதான். அதற்காக எல்லை மீறி நெல்சன் விமர்சிக்கப்படுகிறார் என அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசினர்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரசிகர்கள் நெல்சனை ட்ரோல் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். சமீபத்தில் ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படத்தின் டைட்டில் வெளியானபோதுகூட நெல்சன் சமூக வலைதளங்களில் சிலரால் தாக்கப்பட்டார்.

Vijay

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வில்லனாக நடித்த சாக்கோ கொடுத்திருக்கும் பேட்டி விவாதமாகியுள்ளது. தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தமிழ் சினிமாவுக்கே பீஸ்ட் படம் நல்ல என்ட்ரியாக அமையவில்லை. நான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களையும், ட்ரோல்களையும்தான் பார்த்திருக்கிறேன்.

 

ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கிவருபவர் தான் சிரமப்படுவதை தன்னுடைய முகத்தில் ரியாக்ஷனாக காண்பிக்க வேண்டும். ஆனால், படத்தில் ஏதோ ஒரு பேப்பரை தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார். இதற்காக விஜய் சாரை குறை சொல்ல முடியாது. ஆனால் படக்குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | நயன் ஹனிமூன் எங்கே தெரியுமா?... விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ

அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு ரியாக்‌ஷன் வரவில்லை என எப்படி கூறலாம் என பதிவிட்டுவருகின்றனர். மேலும், இதுதொடர்பாக நெல்சன் திலீப்குமாரையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News