பிக்பாஸ் மும்தாஜ் குறித்து பதிலளித்த பிக்பாஸ் புகழ் ஓவியா...!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்...! 

Last Updated : Aug 24, 2018, 04:03 PM IST
பிக்பாஸ் மும்தாஜ் குறித்து பதிலளித்த பிக்பாஸ் புகழ் ஓவியா...!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்...! 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் 60 நாட்களையும் கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்னைகள் பார்வையாளர்களை கடுப்பாக்கி வருகிறது. அதுவும் சிலர் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, சூழ்ச்சி செய்து வெற்றி பெற நினைப்பது என முழுக்க முழுக்க எதிர்மறையாக நடந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சியை பலர் பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். 

இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் மஹத்தின் நடவடிக்கைகளை பெரும்பாலானோர் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் மஹத்தின் நடவடிக்கைகளுக்கு மும்தாஜ் கொடுக்கும் ரியாக்‌ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியாவிடம் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் தனது பதிவில், பிக்பாஸ் வீட்டில் உங்களது இடத்தை யாரும் நிரப்பவில்லை. இருப்பினும் மும்தாஜ் நேர்மையாக இருக்கிறார். நீங்கள் தான் லெஜண்ட் என்று ஓவியாவிடம் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ஓவியா, நான் பிக்பாஸ் பார்ப்பதே இல்லை. அனைவரும் நல்லவர்கள் தான் என்று கூறினார்.

 

More Stories

Trending News